Shruti Haasan : கூலி படத்தில் ரஜினிகாந்த்தின் மகள் இல்லை.. தனது கதாபாத்திரம் குறித்து ஸ்ருதி ஹாசன் விளக்கம்!

Shruti Haasans In Character Coolie Movie : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Shruti Haasan : கூலி படத்தில் ரஜினிகாந்த்தின் மகள் இல்லை.. தனது கதாபாத்திரம் குறித்து ஸ்ருதி ஹாசன் விளக்கம்!

நடிகை ஸ்ருதி ஹாசன்

Published: 

26 Jul 2025 14:00 PM

நடிகை ஸ்ருதி ஹாசனின் (Shruti Haasan) நடிப்பில், பல வருடங்களுக்குப் பின் தமிழில் வெளியாகவுள்ள திரைப்படம் கூலி (Coolie). நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இந்த படத்தில் முன்னணி வேடத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இந்த கூலி திரைப்படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாக இப்படம் உருவாகியிருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சன் பிக்சர்ஸ் (Sun Pictures) நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், படக்குழு ப்ரோமோஷன் பணிகளைத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஸ்ருதி ஹாசன், கூலி திரைப்படத்தில் தனது ப்ரீத்தி (Preethi) கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். அவர் அதில் , “நான் கூலி படத்தில் சத்யராஜின் மகளாக நடித்திருப்பதாகக் கூறியுள்ளார்”. இவர் ரஜினிகாந்த்தின் மகளாக இப்படத்தில் நடித்திருக்கிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : பெரும் வரவேற்பு.. ‘தலைவன் தலைவி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

கூலி படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஸ்ருதி ஹாசன் பேச்சு :

அந்த நேர்காணலில் நடிகை ஸ்ருதி ஹாசன், “நான் கூலி பட ஷூட்டிங்கில் நடிகர் ரஜினிகாந்த் சாருடன் பெரிய பேச்சுவார்த்தைகள் எதுவும் அமையவில்லை. ஏனென்றால் அந்த படத்தில் நான் சத்யராஜ் சாருடன் அதிகம் டயலாக்ஸ் இருக்கும். ஏனென்றால் கூலி படத்தில் சத்யராஜின் மகள் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன்.

கூலி படத்தில் எனது கதாபாத்திரம் ப்ரீத்தி. நானும் லோகேஷ் கனகராஜும், இனிமேல் பாடல் பண்ணும்போது, இந்த கதையையே பற்றி அவர் என்னிடம் கூறினார். கூலி படத்தில் ப்ரீத்தி கதாபாத்திரம் பற்றி ஒரே லைனில் கதையை என்னிடம் கூறி, என்னை நடிப்பதற்குச் சொன்னார். மேலும் கூலி திரைப்படத்தில் நான் நடிப்பது திடீரென நடந்த சம்பவம்” என நடிகை ஸ்ருதி ஹாசன் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : அமேசானில் காணக் கிடைக்கும் குபேரா படம்… தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாத காரணம் என்ன?

கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு :

இந்த கூலி படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தனியாக நடைபெறும் என நினைத்த நிலையில், படக்குழு புதிய முடிவை எடுத்துள்ளது . அதன்படி வரும் 2025, ஆகஸ்ட் 2ம் தேதியில், கூலி படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை ஒன்றாக நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸும் , அந்த நிகழ்ச்சியின் போது நடைபெறும் எனக் கூறப்படுகிறது. 2025 ஆகஸ்ட் 2ம் தேதியில், சென்னை நேரு உள் அரங்கத்தில் வைத்து இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.