Paranthu Po: வித்தியாசமான கதை.. இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ பட ட்ரெய்லர்!

Shiva Paranthu Po Movie Trailer : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் மிர்ச்சி சிவா. இவரின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு தயாராகிவரும் திரைப்படம் பறந்து போ. இயக்குநர் ராமின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Paranthu Po: வித்தியாசமான கதை.. இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ பட ட்ரெய்லர்!

பறந்து போ திரைப்படம்

Published: 

26 Jun 2025 18:15 PM

 IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் இயக்குநர் ராம் (Ram). இவரின் இயக்கத்தில் மாறுபட்ட திரைக்கதைகளுடன் உருவாகியிருக்கும் படம்தான் பறந்து போ (Paranthu Po). இந்த திரைப்படத்தில் முன்னணி கதாநாயகனாக நடிகர் மிர்ச்சி சிவா (Mirchi Shiva)  நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் பீல் குட் திரைப்படமாக இந்த பறந்து போ படமானது உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் முன்னணி கதாநாயகியாக நடிகை அஞ்சலி (Anjali) நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் மிதுலா, கிரேஸ் ஆண்டனி, விஜய் ஏசுதாஸ், அஜூ வர்கீஸ் மற்றும் பாலாஜி சக்தி வேல் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். முற்றிலும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் சந்தோஷ் தயாநிதி இசையமைக்க,  யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இணைந்து பாடல் பாடியுள்ளார் .

இந்த திரைப்படமானது வரும் 2025, ஜூலை 4ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்னும் இப்படத்தில் ரிலீசிற்கு சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.தற்போது வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று ஜூன் 26, 2025ல் நடைபெற்ற நிலையில், படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சிவாவின் பறந்து போ பட ட்ரெய்லர் :

பறந்து போ திரைப்படம் :

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்துவரும் ராமின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பறந்து போ. இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் ஜிகேஎஸ் ப்ரோஸ் ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. இதில் நடிகர் சிவா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இயக்குநர் ராமின் இயக்கத்தில், சிவா இணைந்த முதல் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதைக்களமானது மிகவும் வித்தியாசமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் இரு கதாநாயகியாக நடித்துள்ளனர்.

அதில் முக்கிய நடிகையாக அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீடு விழா  இன்று 2025, ஜூன் 26ம் தேதியில் நடைபெற்றது. இதில் அப்படக் குழுவினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். இப்படமானது வரும் 2025, ஜூலை 4ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்துடன் நடிகர்கள் சித்தார்த் மற்றும் சரத்குமாரின் நடிப்பில் உருவாகியிருக்கும் 3BHK திரைப்படமும் ஒன்றாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த 2 படங்களும் பீல் குட் திரைப்படம் என்ற நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
Dhanush: எனது முதல் இந்தி படத்தில் பட்ட கஷ்டம் – நடிகர் தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்