சார்பட்டா படத்தில் டான்ஸிங் ரோஸ் கேரக்டர் குறித்து நெகிழ்ந்து பேசிய ஷபீர்!  

Actor Shabeer Kallarakkal: சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமான நபராக மாறினார் நடிகர் ஷபீர் கல்லரக்கல். இவர் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் தனக்கு கொடுத்த கதாப்பாத்திரம் குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார்.

சார்பட்டா படத்தில் டான்ஸிங் ரோஸ் கேரக்டர் குறித்து நெகிழ்ந்து பேசிய ஷபீர்!  

டான்ஸிங் ரோஸ்

Published: 

15 Sep 2025 08:30 AM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். இவர் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமான நபராக மாறினார் நடிகர் ஷபீர் கல்லரக்கல். இயக்குநர் பா. ரஞ்சித் எழுதி இயக்கிய இந்தப் படம் கொரோனா காரணமாக நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியிடப்பட்டது. இதில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய், வேட்டை முத்துக்குமார், கலையரசன், ஜான் கொக்கன், அனுபமா குமார், ஷபீர் கல்லாரக்கல், சந்தோஷ் பிரதாப், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட், சாய் தமிழ், சஞ்சனா நடராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார், கீதா கைலாசம், தங்கதுரை, மாறன், சரவண வேல், கஜபதி, கிஷோர், சூப்பர் சுப்ரமணி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடெக்‌ஷன் மற்றும் கே9 ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பளராக சண்முகம் தக்சன்ராஜ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

டான்ஸிங் ரோஸ் நான் எதிர்பார்க்காத படம்:

இந்தப் படத்தில் நடிகர் ஷபீர் கல்லாரக்கல் டான்ஸிங் ரோஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தால். இவரின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த கதாப்பாத்திரம் குறித்து ஷபீர் கல்லாரக்கல் சமீபத்தில் பேசியுள்ளார்.

அதில், சார்ப்பட்டா பரம்பரை படத்தின் நான் எதிர்பார்க்கவே இல்லை எனது கேரக்டர் இவ்வளவு ஸ்டார்ங்க இருக்கும்னு. ஹீரோ மாதிரி எனக்கு எழுதின வசனம் இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று நடிகர் ஷபீர் கல்லாரக்கல் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… டான்ஸ் கோரியோவில் அந்த விசயம் மிகவும் பிரஷரா இருக்கு – சாண்டி மாஸ்டர்!

ஷபீர் கல்லாரக்கல்லின் சமீபத்தி இன்ஸ்டாகிராம் பதிவு இதோ:

Also Read… துணிவு படம் எனது சினிமா வாழ்க்கையே மாற்றியது – இயக்குநர் எச். வினோத்