Shaam: ஜன நாயகன் படத்தை இறுதி படமாக அறிவித்தது ஏன்? ஷாமிடம் விஜய் சொன்ன விஷயம்!
Shaam About Vijay Last Film: தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவந்தவர் ஷாம். லீடர் படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதில் ஜன நாயகன் படத்தை விஜய் கடைசி படமாக அறிவிக்க காரணம் என்ன என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் மற்றும் ஷாம்
தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஷாம் (Shaam). இவரின் நடிப்பில் தமிழில் 20ஸ் தொடக்கத்தில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவர் திரிஷா (Trisha) முதல் சினேகா (Sneha) போன்ற நடிகைகளுடன் ஜோடியாக படங்களில் நடித்துள்ளார். அந்த விதத்தில் தற்போது இவர் படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் தற்போது படங்களில் ஹீரோவிற்கு அடுத்த வேடம் அல்லது வில்லன் போன்ற வேடங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் லெஜெண்ட் சரவணாவின் (Legend saravana) நடிப்பில் தயாராகியுள்ள லீடர் (Leader) திரைப்படத்தில், சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) வாரிசு (Varisu) என்ற திரைப்படத்தில் அவரின் அண்ணன் வேடத்திலும் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தளபதிக்கு நெருங்கிய நண்பரும் கூட. அந்த விதத்தில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஷாம், ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படத்தை விஜய் கடைசி படமாக அறிவிப்பதற்கு என்ன காரணம், அவர் கேட்டதற்கு விஜய்யின் பதில் என்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய், சூர்யா தனுஷை தொடர்ந்து.. சூரிக்கு ஜோடியாகும் பிரபல இளம் நடிகை?.. அட இவர்தான்!
ஜன நாயகன் படம் விஜய்யின் கடைசி படமாக இருக்க காரணம் பற்றி ஷாம் பேச்சு:
அந்த நேர்காணலில் பேசிய ஷாம், “நான் விஜய்யிடம் ஜன நாயகன் திரைப்படத்தை ஏன் கடைசி திரைப்படமாக அறிவித்தீர்கள்? என கேட்டேன். அதற்க்கு விஜய் என்னிடம், “ஒரு விஷயத்தில் கவனம் மட்டுமே சாதிக்க முடியும்” என என்னிடம் தெரிவித்தார்” என அதில் அவர் கூறியிருந்தார். தற்போது இது குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
நடிகர் ஷாமின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக ஜன நாயகன்:
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைபடாதன ஜன நாயகன். இப்படமானது தெலுங்கு படமான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்ற நிலையில், இதன் ட்ரெய்லர் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் என நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். அந்த விதத்தில் சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் இப்படம் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் பட ஷூட்டிங்… ரிலீஸ் எப்போது தெரியுமா?
இதையடுத்து தற்போது விஜய் முழுவதுமாக அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இதையே இவரின் கடைசி படமாகவும் அறிவித்துவிட்டார். அந்த விதத்தில் இப்படமானது ஏமோது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, ஜன நாயகன் பட 2026 ஜூலை மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.