Selvaraghavan: ஆர்யன் படம் பார்த்து நீங்க நிச்சயம் ஏமாற மாட்டீங்க.. செல்வராகவன் ஓபன் டாக்!

Selvaraghavan About Aaryan Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் செல்வராகவன். இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் ஆர்யன். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன் ஆர்யன் படம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

Selvaraghavan: ஆர்யன் படம் பார்த்து நீங்க நிச்சயம் ஏமாற மாட்டீங்க.. செல்வராகவன் ஓபன் டாக்!

செல்வராகவன்

Published: 

26 Oct 2025 20:32 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் செல்வராகவன் (Selvaraghavan). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பல்டி (Balti). மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் இவர் முக்கிய வில்லனாக நடித்திருந்தார். இந்த பல்டி படமானது கடந்த 2025 செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து ஹீரோவாகவும் புதிய படம் ஒன்றில் செல்வராகவன் நடித்துவருகிறார். அந்த வகையில் தமிழில் வில்லனாக இவர் நடித்திருக்கும் படம்தன் ஆர்யன் (Aaryan).

இந்த படத்தில் விஷ்ணு விஷால் முன்னணி நாயகனாக நடித்திருக்கும் நிலையில், செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார். இந்த ஆர்யன் பட இயக்குநர் பிரவீன் கே இயக்கியிருக்கும் நிலையில், வரும் 2025 அக்டோபர் 31 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன் இந்த ஆர்யன் படம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இப்படித்தான் நீங்கள் வலியை கலையாக மாற்றுகிறீர்கள் – பைசன் படத்தைப் பாராட்டிய நடிகை நிவேதா பெத்துராஜ்!

ஆர்யன் திரைப்படம் குறித்து பேசிய செல்வராகவன் :

அந்த நேர்காணலில் தொகுப்பாளர் ஒரு ரசிகனாக இந்த ஆர்யன் படத்தை எப்படி பார்க்கிறீங்க? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த செல்வராகவன், “ஆர்யன் படம் பார்த்து நீங்க நிச்சயம் ஏமாற மாட்டீங்க. உங்களை எந்தவிதத்திலும் இப்படத்தின் கதையை அதிருப்தியடைய வைக்காது. சில படங்கள் பார்த்தாலே தெரியும் எப்படி வரும் என்று. இந்த ஆரியன் படத்தின் கதை மிகவும் புதியது, மேலும் விஷ்ணு விஷாலும் அவருடைய கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு மாஸ் நடிகருடன் இணையும் நெல்சன் திலீப்குமார்.. அட இந்த ஹீரோவா?

மேலும் விஷ்ணு விஷாலுடன் எனக்கு அதிக காட்சிகள் இல்லை. ஆனால் அவர் ரொம்ப காதலுடன் அவர் நடிக்கிறார். அவர் ஒரு நடிகராக மெனக்கெட்டு நடிக்கிறார் மேலும் அவர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட என்ற நிலையிலும் அதற்கான பொறுப்பும் அவரிடம் இருக்கிறது” என அந்த நேர்காணலில் நடிகரும் இயக்குனருமான செல்வராகவன் தெரிவித்திருந்தார்.

ஆர்யன் படம் குறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவு :

இந்த ஆர்யன் படமானது இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படமானது ராட்சசன் திரைப்படத்திற்கு பின் விஷ்ணு விஷாலின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.