ராமின் பறந்து போ படத்தை மக்கள் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது – சசிகுமார்

Sasikumar about Parnthu Po Movie: இயக்குநர் ராம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் படம் பறந்து போ. இந்தப் படத்தைப் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் படம் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

ராமின் பறந்து போ படத்தை மக்கள் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது - சசிகுமார்

சசிகுமார்

Published: 

06 Jul 2025 12:20 PM

இயக்குநர் ராம் (Director Ram) இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பறந்து போ. அப்பா மற்றும் மகன் இடையே இருக்கும் பாசத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் சிவா நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் அஞ்சலி, கிரேஷ் ஆண்டனி, அஜு வர்கீஸ், விஜய் ஏசுதாஸ், மிதுல் ரியான், பாலாஜி சக்திவேல் மற்றும் ஸ்ரீஜா ரவி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே பிரிவியூ ஷோ பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் படத்தை வெகுவாகப் பாராட்டினர். இந்த நிலையில் படத்தை திரையரங்கில் பார்த்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் (Actor Sasikumar) படம் குறித்தும் இயக்குநர் ராம் குறித்தும் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

இயக்குநர் ராமை புகழ்ந்து பேசிய சசிகுமார்:

இயக்குநர் ராம் படம் என்றாலே ரொம்ப சீரியசதான் இருக்கும் என்று பார்த்து வந்த நிலையில் அதுக்கு மாற்றா ரொம்ப ஜாலியா அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான விசயத்தை குழந்தைகளுக்கான விசயத்தை மிகவும் அழகா சொல்லி இருக்கார் என்று சசிகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய சசிகுமார், நான் பறந்து போ படத்தை தியேட்டரில் தான் பார்த்தேன். என்னால பிரிவியூ பார்க்க முடியல. ஆனா ரொம்ப சந்தோசமா இருக்கு பிரிவியூ பார்க்காம தியேட்டரில் மக்களுடன் சேர்ந்து பார்த்தது. எதுக்குலாம் ரியாக் பன்னாங்க, எந்த சீன் எல்லாம் சிரிச்சாங்க.. நிறைய இடத்தில் மக்கள் சிரிச்சுட்டே இருந்தாங்க என்றும் தெரிவித்தார்.

இணையத்தில் வைரலாகும் சசிகுமாரின் பேச்சு:

மேலும், இந்தப் படத்தில் வழக்கமா பார்த்த சிவா இல்லாம வேறமாதிரி இருந்தார். சில இடங்களில் சிவாவின் எமோஷ்னல் காட்சிகளும் மிகவும் அழகாக இருந்தது. குறிப்பா சொல்லனும்னா சிவாவின் டான்ஸ் காட்சி எல்லாம் சொல்லவே வேண்டாம் சூப்பராக இருந்தது என்றும் சசிகுமார் தெரிவித்து இருந்தார்.

பறந்து போ படத்தை கண்டிபா தியேட்டரில் பார்க்கனும். ஏன்னா மக்களோட இணைந்து இந்தப் படத்தை பார்த்தால் சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயமாக பிடிக்கும் என்றும் சசிகுமார் தெரிவித்துள்ளார்.