Cinema Rewind: நண்பனின் கேரக்டரை காப்பியடித்த சந்தானம்.. என்ன படம் தெரியுமா?
Santhanam : நடிகர் சந்தானம் திரைப்படங்கள் என்றால் அதில் நகைச்சுவை இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு இவரின் படங்களில் நிச்சயமாக நகைச்சுவை இருக்கும். இவர் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் . இந்நிலையில் இவர் முன்னதாக கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில், தனது நண்பனைப் போல ஒரு படத்தில் நடித்தாக கூறியுள்ளார்.

நடிகர் சந்தானம்
கோலிவுட் சினிமாவில் சின்னதிரை நிகழ்ச்சிகளில் இருந்து, சினிமாவில் நுழைந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சந்தானம் (Santhanam). தமிழில் தனியார் தொலைக்காட்சியில் வெளியான லொள்ளு சபா (Lollu Sabha) என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக வலம்வந்த இவர், அதை தொடர்ந்துதான் சினிமாவில் நுழைந்தார் . இவரின் சினிமா நுழைவிற்கு முதல் காரணமாக இருந்தவர் சிலம்பரசன் (Silambarasan). அவரின் நடிப்பில் வெளியான மன்மதன் (Manmadhan) என்ற படத்தின் மூலமாக காமெடியனாக சந்தானம் சினிமாவில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்தது வந்தார். காமெடியனாக சினிமாவில் நடித்துவந்த இவர், அதைத் தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாகவும் நடிக்க தொடங்கிவிட்டார். கடந்த 2014ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீநாத்தின் இயக்கத்தில் வெளியான ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்தும் அடுத்தடுத்த படங்களிலும் நடித்து ஹிட் கொடுத்தார்.
மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் டிடி நெக்ஸ்ட் லெவல் . இந்த படத்தினை நடிகர் ஆர்யா தயாரிக்க, சந்தானம் நடித்திருந்தார். இந்த படமானது எதிர்பார்த்ததை விட, பெரும் தோல்வியைச் சந்தித்தது. மேலும் இதைத் தொடர்ந்து துணை நடிகராக, சிலம்பரசனின் STR 49 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சந்தானம் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், கடந்த 2012ம் ஆண்டு வெளியான, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில், தான் நடித்த கதாபாத்திரம் நிஜமாகவே உள்ள எனது நண்பனைப் பார்த்து தான் நடித்தேன் என்று கூறியுள்ளார். இது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
நடிகர் சந்தானம் பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில் நடிகர் சந்தானம், “நான் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்த பார்த்த கதாபாத்திரம் , நிஜமாகவே இருக்கும் எனது நண்பன் ராஜன் என்பவரின் கதாபாத்திரம்தான். எனது நண்பனும் நிஜவாழ்க்கையில் ஒரு பார்த்தா தான். அவர் எங்கு வைத்து என்னைச் சந்தித்தாலும், “மச்சான் நீ காமெடியா படத்தில் நடிக்கிறேன்னு சொல்றாங்க, ஆனால் எனக்கு சிரிப்பே வரலை” என்று கூறுவார். கிட்டத்தட்ட ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் பார்த்தா கதாபாத்திரத்தையே அவரை வைத்துத்தான் நான் பண்ணேன். அந்த படம் வெளியாகியும், அவன் இன்னும் திருந்தவில்லை, நிஜ வாழ்க்கையில் அவர் இன்னும் பார்த்தாவாகத் தான் இருந்து வருகிறார் என்று நடிகர் சந்தானம் தெரிவித்திருந்தார்.
சந்தானத்தின் இஸ்டாகிராம் பதிவு :
நடிகர் சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் தோல்விக்குப் பின், இயக்குநர் ராஜ்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் STR 49 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிலம்புவிற்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். டான் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படமானது, வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.