மகாநதி படத்தில நடிச்ச போது நான் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தேன் – நடிகை சங்கீதா ஒபன் டாக்

Actress Sangita Madhavan Nair Talks About Mahanadhi Movie Shooting Experience : தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பலப் படங்களில் நடித்து வந்த நடிகை சங்கீதா சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

மகாநதி படத்தில நடிச்ச போது நான் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்தேன் - நடிகை சங்கீதா ஒபன் டாக்

நடிகை சங்கீதா

Published: 

01 Apr 2026 17:27 PM

 IST

மலையாள சினிமாவில் கடந்த 1978-ம் ஆண்டு வெளியான ஸ்நேகிக்க ஒரு பெண்ணு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை சங்கீதா மாதவன் நாயர். இவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் படங்கள் நடித்துக்கொண்டிருந்த நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த 1989-ம் ஆண்டு வெளியான என் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் மட்டும் இன்றி நடிகை சங்கீதா மாதவன் நாயர் தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பிறகு பலப் படங்களில் நாயகியாக நடித்து சூப்பர் ஹிட்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2000-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இறுதியாக நடித்த நடிகை சங்கீதா தற்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். அதன்படி இவர் தற்போது நடித்துள்ள காளிதாஸ் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நடிகை சங்கீதா சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

9-வது படிக்கும் போது மகாநதி படத்தில் நடிச்சேன்:

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1992-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி வெளியான படம் மகாநதி. இந்தப் படம் கமல் ஹாசனின் சினிமா கெரியரில் மிகவும் முக்கியமான படமாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனின் மகளாக நடிகை சங்கீதா நடித்து இருந்தார். அந்தப் படத்தில் நடிக்கும் போது தான் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்ததாக நடிகை சங்கீதா பேட்டியில் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தூசி தட்டப்படும் கிடப்பில் கடந்த அக்னி சிறகுகள் படம்… சம்மரில் வெளியிட படக்குழு திட்டம்

இணையத்தில் வைரலாகும் நடிகை சங்கீதாவின் பேட்டி:

Also Read… Dhanush: தனுஷிற்கு ஜோடியாகும் லப்பர் பந்து பட நடிகை? – எந்த படம் தெரியும்?

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..