டான்ஸ் கோரியோவில் அந்த விசயம் மிகவும் பிரஷரா இருக்கு – சாண்டி மாஸ்டர்!

Sandy Master: தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் சாண்டி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் படங்களில் நடிகர்களுக்கு டான்ஸ் கோரியோ செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

டான்ஸ் கோரியோவில் அந்த விசயம் மிகவும் பிரஷரா இருக்கு - சாண்டி மாஸ்டர்!

சாண்டி மாஸ்டர்

Published: 

14 Sep 2025 07:30 AM

 IST

சின்னத்திரையில் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி (Dance Master Sandy). கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் கலாவின் சிஷ்யர்களின் ஒருவரான சாண்டி தற்போது கோலிவுட் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக வலம் வருகிறார். கோலிவுட் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்தியா அளவில் பல முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வரும் சாண்டி தற்போது படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து வெளியானது லியோ படம். இதில் சைக்கோ வில்லனாக சாண்டி நடித்து இருப்பார். இதுதான் இவர் நடிகராக அறிமுகம் ஆன முதல் படம் ஆகும்.

தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஜாலியான ஒரு நபராக சாண்டியை பார்த்த ரசிகர்கள் அந்தப் படத்தில் பார்த்துவிட்டு அதிர்ந்துபோனது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது மலையாள சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் லோகா படத்தில் முக்கிய வேடத்தில் சாண்டி நடித்துள்ளார். இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலை கடந்து இந்தும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரீல்ஸ்களால் பாதிக்கப்படும் நடனம் – சாண்டி ஓபன் டாக்:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சாண்டி தனது கோரியோகிராஃபி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது தற்போது எந்த பாடலுக்கு நடனம் அமைப்பது என்றாலும் அது அனைவராலும் ஆட முடியுமா குழந்தைகளால் ஆட முடியுமா என்பதை யோசித்து யோசித்து நடனம் அமைக்க வேண்டி உள்ளது.

தற்போது எல்லாம் எந்தப் பாடலாக இருந்தாலும் அதை மக்கள் ரீல்ஸ் செய்து போடும் வகையிலேயே நடத்தை அமைக்க வேண்டி உள்ளது. இந்த விசயம் மிகவும் பிரஷராக இருக்கிறது. ஏன் என்றால் மக்காமிஷி போன்ற பாடலுக்கு எல்லாம் நார்மலாக ஒரு கோரியோ செய்யவேண்டும் என்றால் நான் மிகவும் ஸ்பீடாகதான் செய்து இருப்பேன். ஆனால் இந்த ரீல்ஸ்காக நான் அதனை வேறுமாறி செய்யவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன் என்று சாண்டி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விடாமுயற்சி படம் வெற்றிப்படம்தான் – இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன விசயம்!

இணையத்தில் கவனம் பெறும் சாண்டியின் பேச்சு:

Also Read… பரியேறும் பெருமாள் படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே விட்டுட்டு போயிடலாம் நினச்சேன் – மாரி செல்வராஜ் சொன்ன விசயம்