சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

Maa Inti Bangaram Movie Release Update: பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவரது நடிப்பில் உருவாகி உள்ள மா இண்டி பங்காரம் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

மா இண்டி பங்காரம்

Published: 

22 Feb 2026 19:49 PM

 IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதே ஆண்டு ஏ மாயா சேசாவே என்று தெலுங்கு சினிமாவில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நாய்கியாக அறிமுகம் ஆனார் நடிகை சமந்தா ரூத் பிரபு. தெலுங்கில் நாயகியாக அறிமுகம் ஆன நடிகை சமந்தா அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகை சமந்தா உடல் நலக் குறைவு காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நடிகை சமந்தா ரூத் பிரபுவின் நடிப்பில் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அந்த தயாரிப்பு நிறுவனமான த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பாக சுபம் என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படத்தில் சமந்தா கேமியோ வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பாக சமந்தா தற்போது மா இண்டி பங்காரம் படத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.

மா இண்டி பங்காரம் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ:

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த மா இண்டி பங்காரம் படத்தினை இயக்குநர் நந்தினி எழுதி இயக்கி உள்ளார். இதில் சமந்தா ரூத் பிரபு கதையின் நாயகியாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் குல்ஷன் தேவையா, திகந்த், கௌதமி, மஞ்சுளா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

முன்னதாக இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான போது ரசிகர்கள் அதனை கொண்டாடித் தீர்த்தனர். இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படம் வருகின்ற மே மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… SJ. Suryah: சியான் விக்ரமின் நடிப்புத் திறமையை கண்டு வியந்தேன் – வெளிப்படையாக பேசிய எஸ்.ஜே. சூர்யா!

இணையத்தில் வைரலாகும் மா இண்டி பங்காரம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 70வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் வெற்றிப் பெற்ற தமிழ் பிரபலங்கள் யார் யார்? லிஸ்ட் இதோ

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்