எனக்கு சொந்தமில்லாததை நான் விட்டுவிட்டேன்… இணையத்தில் கவனம் பெறும் நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!
Actress Samantha Ruth Prabhu: தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. உடல் நலக் குறைவால் நடிப்பதில் இருந்து ப்ரேக் எடுத்த இவர் தொடர்ந்து சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களிடையே உறையாடி வருகிறார்.

நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் சமந்தா (Samantha). அதானைத் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைத்தன்யா உடன் நடித்ததன் மூலம் சினிமாவில் நாயகியாக காலடி எடுத்து வைத்தார். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நாயகியாக நடிக்கத் தொடங்கிய நடிகை சமந்தா தமிழில் நடிகர் அதர்வா உடன் இணைந்து பானா காத்தாடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நாயகியாக அறிமுகமான படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து இரண்டு மொழிகளிலும் இவருக்கு படங்கள் வரிசைக்கட்ட தொடங்கின.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடிக்கத்தத் தொடங்கிய நடிகை சமந்தா முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்தார். தெலுங்கு சினிமாவில் இவரின் நடிப்பை கொண்டாடிய ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டியதும் இணையத்தில் அதிகமாகப் பேசப்பட்டது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பலப் படங்களில் நடித்த நடிகை சமந்தா நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமண வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இருந்து 4 ஆண்டுகளிலேயே விவாகரத்தைப் பெற்றனர்.
இணையத்தில் கவனம் பெறும் நடிகை சமந்தாவின் இன்ஸ்டா போஸ்ட்:
விவாகரத்திற்கு பிறகு தொடந்து படங்களில் நடித்து வந்த நடிகை சமந்தா உடல் நலக் குறைவு காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து தற்போது விலகியுள்ளார். அதன்படி இவர் தற்போது படங்களைத் தயாரிக்கும் புதிய நிறுவனத்தை தொடங்கி தொடர்ந்து படங்களை தயாரித்தும் வருகிறார்.
இவரை திரையில் காணமுடியவில்லை என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருந்தாலும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா பதிவிடும் பதிவுகளை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர் சமந்தாவின் ரசிகர்கள். அந்த வகையில் இன்று நடிகை சமந்தா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பாலியல் தொல்லை சினிமாவில் மட்டும் இல்லை… நடிகை சுவாசிகா ஓபன் டாக்
நடிகை சமந்தா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… நிவின் பாலி நடித்துள்ள பார்மா வெப் சீரிஸை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட்