Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பல்லாவரம் டூ பான் இந்தியா… நடிகை சமந்தாவிற்கு ஹேப்பி பர்த்டே!

Actress Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா ரூத் பிரபு இன்று ஏப்ரல் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். பலர் நடிகை சமந்தாவின் இந்தி அறிமுகத்தை தி ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸ் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரது உண்மையான அறிமுகம் 2012 ஆம் ஆண்டு வெளியான ஏக் தீவானா தா திரைப்படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தது ஆகும்.

பல்லாவரம் டூ பான் இந்தியா… நடிகை சமந்தாவிற்கு ஹேப்பி பர்த்டே!
நடிகை சமந்தாImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 28 Apr 2025 12:00 PM

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா தற்போது இந்தி மொழியிலும் கலக்கி வருகிறார். நடிகையாக மட்டுமே சினிமாவில் வலம் வந்த சமந்தா தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். 2010-ம் ஆண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சிம்பு இயக்குநராக எடுக்கும் படத்தில் சமந்தா நாயகியாக நடிப்பது போல ஒரு காட்சியில் சமந்தா தோன்றுவார். அதனைத் தொடர்ந்து யே மாயா சேசாவே என்று தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் ரீமேக் செய்யப்பட்டது. அதில் நடிகை சமந்தா நாயகியாக நடித்தார்.

இந்தப் படத்தில் நடிகர் நாக சைதன்யா நாயகனாக நடித்தார். இந்தப் படத்தையும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கி இருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்த பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார்.

முன்னணி நடிகர்களின் நாயகி:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களுக்கு நாயகியாக நடிக்கத் தொடங்கினார் சமந்தா. மேலும் தெலுங்கு சினிமாவில் நடிகர்கள் நானி, நாக சைதன்யா, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் என பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

காதல் – திருமணம் – விவாகரத்து:

நடிகை சமந்தா டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் ஒன்றாக நடித்ததில் இருந்தே இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு உறவினர்கள் சினிமா பிரபலங்கள் சூழ பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியான தம்பதிகளாக வலம் வந்தனர்.

ஆனால் இந்த திருமணம் பந்தம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. திருமணம் நடைப்பெற்ற 4 ஆண்டுகளிலேயே அது தோல்வியில் முடிந்தது. கடந்த 2021-ம் ஆண்டு நாக சைதன்யா மற்றும் நடிகர்கள் சமந்தா இருவரும் தங்களது பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவாகரத்திற்கு பல கரணங்கள் வதந்திகளாக பரவியது. அது முழுக்க முழுக்க சமந்தாவை சுற்றியே இருந்தது. அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படங்களிலும் வெப் சீரிஸிலும் நடித்து வந்தார் நடிகை சமந்தா.

அறிய வகை நோயால் பாதித்த சமந்தா:

தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கு மத்தியில் தனது பணியை இடைவிடாமல் செய்து வந்த நடிகை சமந்தா கடந்த 2022-ம் ஆண்டு தனது உடல் நலக்குறைவு காரணமாக நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விடுவதாக அறிவித்தார். நடிகை சமந்தாவிற்கு மயோசிடிஸ் என்ற அறிய வகை நோய் இருப்பதால் அவர் சிகிச்சைக்காக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

இதன் காரணமாக அதற்கு முன்னதாக படங்களில் நடிப்பதற்காக அவர் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பி அளித்தார். இதனைக் கேட்ட ரசிகர்கள் மன வேதானை அடைந்தனர். திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் விலகி சிகிச்சையில் கவனம் செலுத்த தொடங்கினார்.

மீண்டும் நடிக்கத் தொடங்கிய சமந்தா:

நோயில் இருந்து நடிகை சமந்தா மெல்ல மெல்ல மீண்டு தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இறுதியாக நடிகை சமந்தா நடிகர் வருண் தவானுடன் இணைந்து சிட்டாடல்: ஹனி பன்னி என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்தார். மேலும் தயாரிப்பாளராக அவரது முதல் தயாரிப்பான சுபம் படம் மே மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகை சமந்தா இன்று அவரது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...