Samantha: 1000 கோடி வசூல் செய்த படமும் இல்லை அதனால் பதற்றம் இல்லை – சமந்தா அதிரடி பேச்சு!
Samantha About Mental Health: கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேலாக எவ்வித படங்களில் நாயகியாக நடிக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஏன் பதட்டமில்லாமல் இருக்கிறேன் என்பது குறித்து விளக்கியுள்ளார்.

சமந்தா
நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu), தமிழ், தெலுங்கு, இந்தியா என பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த வகையில், இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapthy Vijay) முதல் சூர்யா (Suriya) வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் இவருக்கு சிறந்த ஜோடியாகவும், பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவராகவும் இருப்பவர் விஜய்தான். இது குறித்து சமந்தாவே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இவ்வாறு தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக சமந்தா இருந்து வந்த நிலையில், கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக படங்களில் நடிக்கவே இல்லை. இவர் இறுதியாக தனது தயாரிப்பில் வெளியான, “சுபம்” (Shubam) என்ற படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து அவரின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டாவுடன் இறுதியாக குஷி என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால், நடிப்பிற்கு பிரேக் விட்டார். சமீபத்தில் சமந்தா, ஏ.ஐ.எம்.ஏ.வில் நடந்த லீடர்ஷிப் மாநாட்டில் கலந்துகொண்டார். அதில் அவர், தன்னுடைய பதற்றம் மற்றும் அழுத்தம் குறைத்து குறித்து பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க : நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை மிரட்டல்
படங்கள் பற்றி சமந்தா பேசிய விஷயம் :
அந்த மாநாட்டில் நடிகை சமந்தா, மேடையில் பேசி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். அதில் அவர், கடந்த 2 வருடங்களாக எனது நடிப்பில் எந்த படங்களும் வெளியாகவில்லை. மேலும் எண்னிடம்,ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த படங்களும் இல்லை.
இதையும் படிங்க : ஐஸ்வர்யா லெக்ஷ்மி எடுத்த திடீர் முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்!
அதன் காரணமாக நான் இதுவரையில் பதற்றமும் எனக்கு இருந்ததில்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன். அதனால் தற்போது, எனக்கு எந்த பதற்றமும் மற்றும் அழுத்தமும் இல்லை” என்று அந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா ஓபனாக பேசியுள்ளார். இந்த தகவலானது தற்போது, ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
சமந்தா ரூத் பிரபுவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
நடிகை சமந்தாவின் பிஸ்னஸ் வளர்ச்சி :
சமந்தா கடந்தஹ் 2 வருடங்களுக்கும் மேலாக படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது பிஸினஸில் இறங்கியுள்ளார். அழகுசாதன பொருட்கள், வாசனை திரவியம் மற்றும் ஆர்கானிக் விவசாயம் என பல திட்டங்களை செயல்படுத்திவருகிறார்.
மேலும் இவர் குழந்தைங்களுக்கான பள்ளிக்கூடத்தையும் நடத்திவருவதாக கூறப்படுகிறது. இந்த வகையில், தொடர்ந்து டரலாலா மூவிங் பிக்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.