வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சாய் பல்லவி – வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபல நடிகையாக வலம் வந்த சாய் பல்லவி தற்போது இந்தி சினிமாவிலும் பிரபலம் ஆகியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பிகினி உடையில் அவர் இருப்பதாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சாய் பல்லவி - வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்
தமிழ் சினிமாவில் தாம் தூம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை சாய் பல்லவி (Actress Sai Pallavi). இந்தப் படத்தை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மாறாக அவர் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன்படி மலையாள சினிமாவில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக அறிமுகம் ஆன சாய் பல்லவியின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவியின் மலர் கதாப்பாத்திரத்தை தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டே இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
இதில் அதிகமாக தெலுங்கு மொழியில் அவர் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நாயகியாக நடித்து வந்த நடிகை சாய் பல்லவி தற்போது இந்தி சினிமாவில் நடிகையாக காலடி பதித்துள்ளார். அதன்படி அவர் ரன்பீர் கபூர் உடன் இணைண்டு ராமாயணா படத்தில் நடித்து வருகிறார். அதன்படி ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக நடிகை சாய் பல்லவியும் நடித்து வருகின்றது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த ராமாயணா படத்தின் முதல் பாகம் வருகின்ற 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் வெளியாகும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை சாய் பல்லவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் உண்மையானவை மற்றும் ஏஐ-யால் உருவாக்கப்படவில்லை:
அதன்படி நடிகை சாய் பல்லவி தனது தங்கை மற்றும் அவரது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சுற்றுழா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் இங்கு இருக்கும் புகைப்படங்கள் உண்மையானவை. ஏஐ-யால் உருவாக்கப்பட்டது இல்லை என்றும் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக அந்த பிகினி புகைப்படத்தில் இருப்பது அவர் இல்லை என்று மறுத்துள்ளார் என்று புரிகிறது.
Also Read… அவங்க என்னோட கூட பிறந்த அக்கா… ப்ரீத்தி அஸ்ரானி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்