Sai Pallavi: தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி – சாய் பல்லவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு!

Sai Pallavi Instagram Post: பான் இந்திய கதாநாயகியாக புகழப்படுபவர் சாய் பல்லவி. இவர் தற்போது தென்னிந்திய மொழிகளை கடந்து இந்தி படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் இவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழக விருதுகள் வழங்கப்பட்டதையடுத்து, அதற்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார்.

Sai Pallavi: தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி - சாய் பல்லவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு!

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த சாய் பல்லவி

Updated On: 

10 Mar 2026 15:54 PM

 IST

நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) தற்போது பான் இந்தியா வரை புகழப்படும் ஒரு பிரபல கதாநாயகியாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் தற்போது இந்த போன்ற மொழிகளிலும் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவின் மீது இவர் கவனம் செலுத்த தொடங்கியுள்ள நிலையில், இவர் நடித்துள்ள முதல் இந்தி படம்தான் “ஏக் தின்” (Ek Din). இந்த படத்தில் அமீர்கானின் மகன் ஜுனைத் கானுக்கு (Junaid Khan) ஜோடியாக நடித்துள்ளார். இப்படமானது வரும் 2026 மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் இதையடுத்து இந்தியில் ராமாயணம் (Ramayana) என்ற படத்தின் சீதையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவருக்கு தமிழக அரசின் சார்பாக சிறந்த நடிகைக்கான விருது (Tamil Nadu Film Award) கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 2022ம் ஆண்டில் வெளியான கார்கி (Gargi) படத்திற்காக இவருக்கு தமிழக திரைப்பட விருது, சிறந்த நடிகை என்ற நிலையில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த விருது விழா முடிந்து பல நாட்களான நிலையில், தற்போது நடிகை சாய் பல்லவி தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நான் என் படத்திற்கு யூத் பெயர் வைக்க இதுதான் காரணம் – கென் கருணாஸ் விளக்கம்

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து நடிகை சாய் பல்லவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

அந்த பதிவில் நடிகை சாய் பல்லவி, “இந்த கௌரவத்தை கொடுத்த தமிழக ஆசிர்க்கு எனது மனமார்ந்த நன்றி. கார்கி, ஒரு முக்கியமான உரையாடலின் தொடக்கமாக உருவாக்கப்பட்டது, அதன் வெளியீட்டிற்குப் பிறகு அது என்ன செய்ய திட்டமிட்டதோ அதைச் சரியாக செய்துவிட்டது. எனக்கு இந்த சிறந்த நடிகைக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கும் நிலையில், ஒரு முழு வட்டத்திற்கு வந்துவிட்டும். இந்த விருதைஆர்.எஸ்.சிவாஜி சார் மற்றும் கார்கி முழு படக்குழுவிற்கு அர்ப்பணிக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கானின் கதாப்பாத்திரம் இதுவா? வைரலாகும் தகவல்

சாய் பல்லவி நடிக்கும் புது தமிழ் படம் :

நடிகை சாய் பல்லவி பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து நடித்துவரும் நிலையில், தற்போது 1 ஆண்டுக்கு பின் மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் டி55 படத்தில் நடிக்கிறார். இதில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா என இரு நடிகைகளும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சாய் பல்லவியும் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..