சாய் பல்லவி இந்தியில் அறிமுகம் ஆகும் ஏக் தீன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது

Sai Pallavi and Junaid Khan's Ek Din Movie Trailer: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி தற்போது இந்தி சினிமாவிலும் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தி சினிமாவில் அவர் நாயகியாக அறிமுகம் ஆகும் ஏக் தீன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

சாய் பல்லவி இந்தியில் அறிமுகம் ஆகும் ஏக் தீன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது

ஏக் தீன்

Published: 

16 Apr 2026 14:11 PM

 IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி சினிமா பயணத்தை தொடங்கியவர் சாய் பல்லவி. அதனைத் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகை சாய் பல்லவி தொலைக்காட்சிகளில் பல நடன போட்டிகளில் கலந்துகொண்டு பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பிசியான நடிகையாக மாறினார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து வந்தார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகை சாய் பல்லவி தற்போது இந்தி சினிமாவில் நடித்து வருகிறார்.

அதன்படி தற்போது நடிகை சாய் பல்லவி இந்தி சினிமாவில் ஏக் தீன் மற்றும் ராமாயணா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி தற்போது இந்தி சினிமாவில் நடிகை சாய் பல்லவி அறிமுகம் ஆக உள்ள ஏம் தீன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

சாய் பல்லவியின் ஏக் தீன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது:

இந்த ஏக் தீன் படத்தில் நடிகர் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் நாயகனாக நடித்து உள்ளார். நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து உள்ள இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் குணால் கபூர், கவின் டேவ் மற்றும் பிரகதி மிஸ்ரா ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சுனில் பாண்டே எழுதி இயக்கி உள்ளார். மேலும் அமீர் கான் புரடெக்‌ஷன்ஸ் சார்பாக இந்தப் படத்தினை தயாரிப்பாளர்கள் மன்சூர் கான், அமீர் கான் மற்றும் அபர்ணா புரோஹித் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற 1-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தனுஷின் கர படத்தின் ப்ரீ ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

ஏக் தீன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் மோகன்லாலின் 366-வது படத்தின் டைட்டில் இதுதான் – வைரலாகும் போஸ்டர்

Follow Us
வெறும் 9 ரூபாய் சம்பள உயர்வு.. இணையத்தில் வைரலாகும் பதிவு..
பெங்களூருவில் 500 ரூபாயில் வாழ முடியும் - வைரலாகும் பெண்ணின் அனுபவம்
கிளினிக்குள் சிக்கிய சிறுவன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ..
காதலனுக்காக பெற்றோருக்கு விஷம் கொடுத்த சிறுமி.. இணையத்தில் கசிந்த ஆடியோ..