S.A.C: விஜய்க்கு அரசியல் வர பல காரணங்கள் இருக்கலாம்…ஆனால் அதுவும் ஒரு காரணம்- எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு!
Thalapathy Vijay Politics Reason: தமிழ் சினிமாவில் கடந்த 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் சிறந்த இயக்குநராக இருந்துவந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தளபதி விஜய்யின் அப்பாவும் கூட, சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அதில் விஜய்க்கு அரசியல் எண்ணத்தை தூண்டிய காரணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தளபதி விஜய்
கோலிவுட் சினிமாவில் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவர்தான் எஸ்.ஏ.சந்திரசேகர் (S.A.Chandrasekhar). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவர் தற்போது சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். இவர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) தந்தை என்பதால் அவரின் பல்வேறு அரசியல் கூட்டத்திலும் கலந்துகொண்டுவருகிறார். மேலும் தளபதி விஜய்யின் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். இவரின் இயக்கத்தில் மூலமாக அறிமுகமான விஜய், தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்திலும் நடித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டார்.
அதில் மேடையில் பேசிய இவர், தளபதி விஜய்க்கு அரசியலில் (Politics) வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கியமான காரணம் அவர் நடித்த சில திரைப்படங்களும் காரணம் என அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்… வைரலாகும் ஜன நாயகன் பட அப்டேட்
தளபதி விஜய்க்கு அரசியல் ஆர்வம் வருவதுற்கு முக்கியமான கரணம் என்ன என்பது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு :
அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், அதில் “எனது மகன் விஜய், பொதுவாக அனைவருக்கும் பணம் மட்டும்தான் வாழ்க்கை. சினிமாவில் நல்லபடியாக நடித்து எவ்வளவு சம்பாதிக்கலாம். உங்கள் TVK தலைவர் பற்றிதான் சொல்லுகிறேன். அவர் அதையெல்லாம் விட்டுவிட்டு, உங்களுக்கு, இந்த தமிழக மக்களுக்கு சேவை செய்யவேண்டுமென ஒரு எண்ணத்துடன் வந்திருக்கிறார். அவரின் மனதில் அரசியல் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் அவர் நடித்த சில திரைப்படங்களும் காரணம். ஒரு நடிகனின் மனதின் ஒரு விதையை விதைக்கிறார்கள் இயக்குநர்கள். ஒரு காதல் சார்ந்த கதைக்களத்தில் நடிக்கும் நடிகர்கள் அது தொடர்பான விஷயத்தோடு போயிருவாங்க.
இதையும் படிங்க: அருண் விஜயின் ரெட்ட தல படத்தினை யார் எல்லாம் பார்க்கலாம்? சென்சார் அப்டேட் இதோ
விஜய் குறித்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய வீடியோ :
“My son @actorvijay, could easily act in Films & he can easily earn more. But his coming to Politics to service you♥️🔥. MGR has acted in social responsible films & became leader👑. Likewise ARMurugadoss induced responsibility through his films🤝”
– #SACpic.twitter.com/jAGFcoP3dM— AmuthaBharathi (@CinemaWithAB) December 15, 2025
மேலும் சமுதாயம் உணர்வு சார்ந்த படங்களின் மூலம் அந்த நடிகரின் மனதின் ஒரு விதையை விதைக்கிறார்கள். அப்படிப்பட்ட திரைப்படங்களில் நடித்து நடித்து, எம்ஜிஆர் அவர்களும் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். மேலும் தலைவராகவும் வந்து நின்றார். அதுபோல் இந்த ஜெனெரேஷனில் ஒரு நடிகரின் மனதில் சமூக உணர்வை விதைக்கும் பல இயக்குநர்கள் இருக்கிறர்கள். அதில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் ஒருவர்” என அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.