RJ Balaji: ஒரு மாஸ் ஹீரோவின் கதை.. கருப்பு படம் இப்படிதான் இருக்கும் – ஆ.ஜே.பாலாஜி!

RJ Balaji About Karuppu Movie : நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் கருப்பு. இப்படம் குறித்து சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றில் பேட்டி கொடுத்திருந்த ஆர்.ஜே.பாலாஜி, படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.

RJ Balaji: ஒரு மாஸ் ஹீரோவின் கதை.. கருப்பு படம் இப்படிதான் இருக்கும் - ஆ.ஜே.பாலாஜி!

சூர்யா

Updated On: 

16 Apr 2026 15:13 PM

 IST

நடிகர் சூர்யாவின் (Suriya) 45வது படமாக கடந்த 2024ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்ட திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இந்த படமானது சூர்யாவின் 45வது படமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவருகிறது. அந்த விதத்தில் இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இந்த ஜோடி ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இப்படமானது வரும் 2026 மே 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, கருப்பு படம் எப்படி இருக்கும் என்பது குறித்து ரசிகர்களுக்கு சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் நடிகர் அதர்வா முரளி? இணையத்தில் வைரலாகும் தகவல்

கருப்பு திரைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி:

அந்த பத்திரிகை பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, “கருப்பு என்பது குடும்பங்கள் ஒன்றாக கொண்டாடும், ஒரு பிரம்மாண்ட பண்டிகைக்கால பொழுதுபோக்கு திரைப்படம். சூர்யா சார் போன்ற மாஸ் ஜீரோ இருக்கும்போது, எமோஷன், ஆக்ஷன் மற்றும் மனதில் நிலைத்து நிற்கும் காதல் கதை என அனைத்தையும் இணைத்து வழங்குவது மிகவும் முக்கியம்.

இதையும் படிங்க: 22 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா ஒன்னா நடிக்கிறாங்க… ஆர்.ஜே.பாலாஜி

ஒரு ரசிகராக சூர்யா சாரை எப்படி திரையில் பார்க்கவேண்டும் என்று நான் விரும்பினேனோ, அதே போல இப்படத்தையும் வடிவமைத்திருக்கிறேன். அந்த அடிப்படியில் நான் எழுதிய கதை, இதில் அவரை சக்திவாய்ந்த ஆக்ஷன் மற்றும் எனஜியோடும் காட்டியுள்ளேன். இதை நாங்கள் ஒரு பிரம்மாண்டமான, அதிரடி நிறைந்த பாணியில் சித்தரித்துள்ளோம். நான் இறுதித் தொகுப்பைப் பார்த்தபோது, ​​சூர்யாவின் பார்வையும், திரையில் அவரது பிரசன்ஸ் உண்மையிலேயே மிகச் சிறப்பாகத் தனித்து நிற்கும். ஒரு நட்சத்திரத்திற்கு அதுதான் உண்மையில் முக்கியம். 10 பேர் கொண்ட கூட்டத்தில்கூட, அவர் தனித்துத் தெரிகிறார். இந்தத் துறையில், சூர்யாவிற்கு நிகராக யாரும் இல்லை” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

கருப்பு திரைப்படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த கருப்பு படமானது கிட்டதட்ட ரூ 150 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்திலிருந்து இதுவரை மொத்தமாக 3 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துவருகிறது.

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி