22 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா ஒன்னா நடிக்கிறாங்க… ஆர்.ஜே.பாலாஜி

RJ Balaji talks about Suriya and Trisha reunite after 22 years: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக உள்ள நடிகர் சூர்யா மற்றும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இருவரும் கருப்பு படத்தில் இணைந்து நடிப்பது குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசியுள்ளார்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா - த்ரிஷா ஒன்னா நடிக்கிறாங்க... ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி

Published: 

16 Apr 2026 10:49 AM

 IST

தமிழ் சினிமாவில்  பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ளார். இது நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள 45-வது படம் ஆகும். பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த கருப்பு படத்தை தயாரித்து உள்ளது. மேலும் இந்தப் படம் கடந்த ஆண்டே வெளியாவதாக இருந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். மேலும் படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களின் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகர்கள் சூர்யா மற்றும் த்ரிஷா க்ருஷ்ணன் இருவரும் இந்த கருப்பு படத்தில் எப்படி இணைந்தார்கள் என்பது குறித்து ஆர்.ஜே.பாலாஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார். அந்தப் பேட்டி தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

22 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா ஒன்னா நடிக்கிறாங்க:

ஆறு படத்திற்குப் பிறகு, 22 ஆண்டுகள் கழித்து சூர்யாவும் திரிஷாவும் மீண்டும் இணைகிறார்கள். முன்னதாகவே நான் திரிஷாவுடன் ஒரு படம் செய்யவிருந்தேன், ஆனால் அது கைகூடவில்லை. எனவே, ‘கருப்பு’ படத்திற்காக நான் அவரை அணுகினேன். அவருக்கு முழு கதையும், அதில் வரும் அவரது கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தன. படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் முழுவதும், அவர் எங்களுடனேயே உடனிருந்து பணியாற்றினார் என்று ஆர்.ஜே. பாலாஜி அந்தப் பேட்டியில் தெரிவித்து உள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… புத்தாண்டில் புதுப் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரவி மோகன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

Also Read… மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த கௌதம் ராம் கார்த்திக் – வைரலாகும் வீடியோ

Follow Us
Related Stories
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி