23 ஆண்டுகளாகத் தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது ஒரு நம்பமுடியாத சாதனை – த்ரிஷா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி

RJ Balaji Talks About Trisha Krishnan: நடிகர் சூர்யாவின் கருப்பு படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று நடைப்பெற்றது. அதில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி நடிகை த்ரிஷா குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

23 ஆண்டுகளாகத் தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது ஒரு நம்பமுடியாத சாதனை - த்ரிஷா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி

கருப்பு

Published: 

30 Apr 2026 14:53 PM

 IST

தமிழ் சினிமாவில் ஜோடி என்ற படத்தின் மூலம் சிறிய வேடத்தில் நடித்தார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். அதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்தப் படம் மௌனம் பேசியதே. இந்தப் படத்தின் மூலமாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக அறிமுகம் ஆனார். நாயகியாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவில் மட்டும் நடிகர்கள் விஜய், அஜித் குமார், சூர்யா, கமல் ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ், சிலம்பரசன், ஜெயம் ரவி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சுமார் 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். இதுவரை எந்த நடிகையும் இப்படி நிலைத்து இருந்தது இல்லை என்று சினிமா வட்டாரங்களில் தெரிவித்து வருகின்றனர். 90ஸ் கிட்ஸ்கள் முதல் தற்போது உள்ள ஆல்ஃபா கிட்ஸ்கள் வரை அனைவரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன்.

23 ஆண்டுகளாகத் உச்சத்தில் நீடிப்பது ஒரு நம்பமுடியாத சாதனை:

அதன்படி தற்போது நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. நடிகர் சூர்யாவிற்கு ஜோடியகா நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்து உள்ளார். இது குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி த்ரிஷா இன்று எங்களுடன் இணைய முடியவில்லை. இருப்பினும், அவருக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘த்ரிஷாவாக’ இருப்பது எளிதல்ல. கடந்த 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது ஒரு வியத்தகு சாதனையாகும். அண்மைக் காலத்தில் அவர் வழங்கிய மிகச் சிறந்த நடிப்புகளில் இதுவும் ஒன்றாகத் திகழும் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read… மீண்டும் தள்ளிபோகிறதா கருப்பு படம்? இது என்ன புது ட்விஸ்டா இருக்கு

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

Also Read… TN 2026 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..