RJ Balaji: கருப்பசாமி பக்தர்களுக்காக ஸ்பெஷல் பாடல்.. கருப்பு பட ஆடியோ லான்ச் குறித்து வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி!
RJ Balaji About Karuppu Audio Launch: சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் திரைப்படம்தான் கருப்பு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (26/04/2026) மதுரையில் நடைபெறவுள்ளது. அந்த வகையில் இசை வெளியீட்டு விழாவில், கருப்பசாமி பக்தர்களுக்கான ஸ்பெஷல் பாடல் வெளியிடப்படவுள்ளதாக ஆர்.ஜே.பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி
தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகனாக படங்களில் நடித்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 44 படங்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் 45வது திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் கருப்பு திரைப்படம். இதை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, சூர்யா லீட் ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளார். இந்த கருப்பு திரைப்படமானது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் தயாராகிவந்த நிலையில், ஒருவழியாக 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கருப்பு படத்தில் சூர்யா, திரிஷா (Trisha), ஸ்வாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, நட்டி நடராஜன் மற்றும் யோகி பாபு என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படமானது கருப்பசாமியின் தெய்வீகம் போன்ற கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருக்கும் நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று 2026 ஏப்ரல் 26ம் தேதியில், மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரஜினி – கமல்.. விஜய் – அஜித்.. தனுஷுக்கு யாரு? கே.எஸ்.ரவிக்குமாரின் கேள்விக்கு தனுஷ் கொடுத்த பதில்!
கருப்பு பட இசைவெளியீட்டு விழா குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ:
#RJBalaji: We’ll try to give an Extraordinary, unforgettable event.. Sai Abhyankkar will perform live.. There won’t be live streaming.. Verappa’s extended version will release later.. But there will be a very special song for Karuppu samy devotees..🤝pic.twitter.com/HlN47fDU6R
— Laxmi Kanth (@iammoviebuff007) April 26, 2026
இந்த் வீடியோவில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, கருப்பு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை, மதுரையில் வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது நடந்துவிட்டது. இந்த ஆடியோ லான்ச்சில், வெரப்பா பாடலின் நீட்டிக்கப்பட்ட வெர்ஸன் வெளியிடப்படாது என்றும், மதுரையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த சூர்யா ரசிகர்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறித்தும் பேசியுள்ளார். மேலும் உலகமெங்கும் உள்ள கருப்பசாமி பக்தர்களுக்காக ஒரு ஸ்பெஷல் பாடல் இன்று வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளார். தற்போது இவர் பேசி வெளியிட்ட வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: கோடி ரூபா கொடுத்தாலும் அந்த விளம்பரங்களை பண்ணமாட்டேன் – ஜி.வி.பிரகாஷ் குமார் பேச்சு!
இந்த கருப்பு திரைப்படமானது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் தயாராகிவந்த நிலையில், எப்போது வெளியாகும் என்பதுகுறித்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்துவந்தது. அந்த விதத்தில் வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் இப்படமானது வெளியாகிறது. அந்த வகையில், சூர்யாவிற்கு இதுவொரு வெற்றி படமாக அமையும் என நம்பப்படுகிறது.