நெல்சனின் முதல் படம் பாதியிலேயே நின்னுடுச்சு… ஆனா இப்போ – நெல்சன் குறித்து பெருமையாக பேசிய ஆர்.ஜே.பாலாஜி
RJ Balaji Talks About Nelson Dilipkumar: இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பெருமையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆர்.ஜே.பாலாஜி
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பிரபல இயக்குநராகவும் நாயகனாகவும் வலம் வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இவர் இயக்கி நடித்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உள்ளது. இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவை வைத்து கருப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இரண்டு ஆண்டுகளாக தயாராகி வந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகின்றது. அந்த வகையில் கடந்த வாரம் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது.
இந்த விழாவில் நடிகர்களும் படக்குழுவினரும் கலந்துகொண்டு படம் குறித்தும் படக்குழுவினர் குறித்தும் தொடர்ந்து பல தகவல்களை வெளிப்படையாக பேசினர். மேலும் இந்தப் படம் தொடர்பாக நடிகர்கள் தொடர்ந்து பேட்டிகளில் பேசி வருகின்றன. அப்படி கருப்பு படத்திற்காக பேட்டி ஒன்றில் பேசிய போது இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் சினிமா வளர்ச்சி குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நெல்சன் குறித்து பெருமையாக பேசிய ஆர்.ஜே.பாலாஜி:
அதன்படி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது, இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான முதல் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதன் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கோலமாவு கோகிலா படத்தை உருவாக்கினார். அங்கிருந்து வளர்ந்து, தற்போது கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்ற நட்சத்திரங்களைக் கொண்டு படங்களை இயக்கும் நிலையை அவர் அடைந்துள்ளார். இப்போது அவர் ரூபாய் 50 கோடி சம்பளமாகப் பெறுகிறார். அவரது இந்தப் பயணத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Peddi: புது ரிலீஸ் தேதியை லாக் செய்தது ராம் சரணின் ‘பெடி’ படக்குழு – விவரங்கள் இதோ!
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:
#RJBalaji:
– #Nelson’s first film was dropped, but after many years he made Kolamaavu Kokila. From there, he has grown to direct films with #KamalHaasan and #Rajinikanth.
– Now he is earning a salary of ₹50 crores, just look at his journey.#KHxRKpic.twitter.com/ObwjLjzEWU— Movie Tamil (@_MovieTamil) May 1, 2026