kantara Chapter 1: பாக்ஸ் ஆபிஸ் சூப்பர் ஹிட்.. வெற்றியைக் கொண்டாடிய காந்தாரா சாப்டர் 1 படக்குழு!
kantara Chapter 1 Movie Success Meet: பான் இந்திய மொழிகளில் கடந்த 2025 அக்டோபர் 2ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1. இந்த படமானது பல்வேறு மொழிகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. பாக்ஸ் ஆபிசில் இப்படம் சாதனை செய்த நிலையில், இந்த படத்தின் வெற்றியை படக்குழு இணைந்து கொண்டாடியுள்ளது.

காந்தாரா சாப்டர் 1 படக்குழு
கன்னட சினிமாவில் பிரபலமிக்க நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty). இவரின் இயக்கம் மற்றும் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் விஜயதசமியை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி மற்றும் ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டு வெளியான காந்தாரா படத்தின் முன் நடந்த கதையை வைத்து காந்தாரா சாப்டர் 1ன் திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் வெளியாகியிருந்த நிலையில் , மிக பிரம்மாண்டமாக இந்த படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த படமானது வெளியாகி 1 மாதத்தை கடந்த நிலையில், சமீபத்தில் இப்படக்குழு வெற்றிவிழாவை இணைந்து கொண்டாடியுள்ளனர்.
இந்த விழாவில், ரிஷப் ஷெட்டி, அவரின் மனைவி, நடிகை ருக்மிணி வசந்த், ஜெயராம் (Jayaram) உட்பட படத்தில் பணியாற்றிய பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் படக்குழு கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: இது தளபதி கச்சேரி நாள்… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட புது வீடியோ!
காந்தாரா படக்குழு வெற்றிவிழா பதிவு :
ಈ ಗೆಲುವು ಕೇವಲ ನಮ್ಮದಲ್ಲ, ಎಲ್ಲರದು. ನಿಮ್ಮ ಪ್ರೀತಿಗೆ ಎಂದೆಂದಿಗೂ ಋಣಿ.
The journey of #KantaraChapter1 has been monumental!
We gathered as a team to celebrate, yet this victory truly belongs to you, the audience. ✨Standing together, deeply grateful for this historic run.
We poured… pic.twitter.com/4e8KqHyXDa— Hombale Films (@hombalefilms) November 8, 2025
ஓடிடியில் வரவேற்பை பெறும் காந்தாரா சாப்டர் 1:
இந்த காந்தாரா சாப்டர் 1 வெளியாவதற்கு முன்னே பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது உயிரிழப்புகள், விபத்துகள் என பல்வேறு மோசமான விஷயங்கள் நடந்திருந்த நிலையில், மேலும் பல்வேறு விதமான பேச்சுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால் இந்த படமானது வெளியாகி இந்த அனைத்தையும் முறியடித்துள்ளது. இந்த படமானது விஜயதசமியை முன்னிட்டு வெளியான நிலையில், கிட்டத்தட்ட 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனுடன் மோதும் அருண் விஜய்.. ‘ரெட்ட தல’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் சுமார் ரூ 85 கோடிகளை கொடுத்து வாங்கியிருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படம் திரையரங்குகளை போலவும் ஓடிடியிலும் மக்களிடையே சிறப்பான விமர்சனங்களையே பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.