Rishab Shetty: ஒரு ஆர்டிஸ்ட்தான் அதை செய்ய முடியும்… மணிகண்டனை புகழ்ந்து தள்ளிய ரிஷப் ஷெட்டி!

Rishab Shetty praises Manikandan: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் ரிஷப் ஷெட்டி. இவரின் இயக்கத்திலும் முன்னணி நடிப்பிலும் வெளியாகியுள்ள படம்தான் காந்தாரா சாப்டர் 1. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டியின் கதாபாத்திரத்திற்கு நடிகர் மணிகண்டன் டப்பிங் செய்த நிலையில், அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.

Rishab Shetty: ஒரு ஆர்டிஸ்ட்தான் அதை செய்ய முடியும்... மணிகண்டனை புகழ்ந்து தள்ளிய ரிஷப் ஷெட்டி!

மணிகண்டன் மற்றும் ரிஷப் ஷெட்டி

Updated On: 

02 Oct 2025 16:36 PM

 IST

கன்னட சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குநராக ஹிட் படங்களை கொடுத்து வருபவர் ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty). இவரின் முன்னணி நடிப்பிலும் மற்றும் இயக்கத்திலும் கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம்தான் காந்தாரா (Kantara). இந்நிலையில், இப்படத்தின் முன் நடந்த கதையை மையமாக கொண்டு தற்போது வெளியாகியிருக்கும் படம் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இந்த படத்திலும் நடிகர் ரிஷப் ஷெட்டி முன்னணி கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், இன்று 2025 அக்டோபர் 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி உட்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் முதல் பாகத்திற்கு அதிக வரவேற்புகள் இருந்த நிலையில், இந்த காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தின் தமிழ் டப்பிங்கில் நடிகர் ரிஷப் ஷெட்டியின் கதாபாத்திரத்திற்கு நடிகர் மணிகண்டன் (Manikandan) டப்பிங் கொடுத்திருந்தார். இந்நிலையில், நடிகர் மணிகண்டனை புகழ்ந்த ரிஷப் ஷெட்டி பேசியுள்ளார்.

இதையும் படிங்க : புதிய அணியுடன் அஜித்.. ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்பு

மணிகண்டனை புகழ்ந்து பேசிய ரிஷப் ஷெட்டி :

அந்த நேர்காணலில் நடிகர் ரிஷப் ஷெட்டி, தமிழில் காந்தாரா சாப்டர் 1ன் படத்திற்கு எனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்தவர் மணிகண்டன் தான். அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகரும் கூட, அவரின் நடிப்பு மற்றும் மிமிக்கிரி உட்பட பல்வேறு விஷயங்கள் பிடிக்கும். மணிகண்டன் சாதாரணமான மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கிடையாது, அவருக்கு ஒரு திறமை இருக்கு. அவர் எந்த கதாபாத்திரம் என்றாலும், அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவார். அவர் தல அஜித் குமாரின் குரலையே அழகாக பேசுவாரு. அப்படி பல்வேறு விஷயங்களை எளிதாக பண்ணுவாரு, அதற்காக இவருக்கு எதாவது பண்ணவேண்டும் என நினைத்தேன்.

இதையும் படிங்க : சூப்பரா? சொதப்பலா? – காந்தாரா சாப்டர் 1 படத்தின் விமர்சனம்!

அதனால் இந்த காந்தாரா சாப்டர் 1 தமிழிற்கு அவரை டப்பிங் பேசவைக்கலாம் என நினைத்தேன். அவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் இல்லாத நிலையில், பல்வேறு அனுமதியையும் வாங்கினோம். மேலும் அவர் வாய்ஸ் டெஸ்டிங்காக, ரெக்கார்ட் பண்ணி அனுப்புனாரு. அதை கேட்டுட்டு அவரிடம் நான் கூறியது, “மணிகண்டன் உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு, நான் உங்களுடைய ரசிகன்” என நான் கூறினேன். அதற்கு அவர், “நான்தான் உங்களுடைய ரசிகன்” என கூறினார்.

மணிகண்டன் குறித்து ரிஷப் ஷெட்டி பேசிய வீடியோ:

மேலும் ஒரு சாதாரணமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்றால் அவர்களால் முடிந்தவரை வாய்ஸ் கொடுப்பாங்க, ஆனால் ஒரு நடிகர் அப்படி இல்லை. அவர் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்தே பேசுவார். அது போல மணிகண்டனும் இந்த படத்திற்கு அருமையாக வேலை செய்திருகிறார்” என நடிகர் ரிஷப் ஷெட்டி அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.