சட்டம் பொண்ணுங்க சொன்னா நம்பும்பா… ஆண்பாவம் பொல்லாதது ட்ரெய்லர் இதோ!
Aan Paavam Pollathathu Movie Official Trailer | நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஆண் பாவம் பொல்லாதது. இந்தப் படம் இந்த மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

ஆண்பாவம் பொல்லாதது
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் ரியோ ராஜ் (Actor Rio Raj). நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் போதே தனக்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நாயகனாக நடித்து தனக்கான ரசிகர்களின் பட்டாளத்தை பெரிதாக்கினார். அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த ரியோ வெள்ளித்திரையிலும் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் வெள்ளித்திரையில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் இவரது படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இறுதியாக நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ஸ்வீட் ஹார்ட். இந்தப் படம் திரையரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆண்பாவம் பொல்லாதது. இந்தப் படத்தை இயக்குநர் கலையரசன் தங்கவேல் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மனோஜ் நாயகியாக நடித்துள்ளார். இவர் முன்னதாக நடிகர் ரியோ ராஜ் உடன் இணைந்து ஜோ படத்தில் நடித்து இருந்தார். அவர்கள் ஜோடி அந்தப் படத்திலேயே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஆண்பாவம் பொல்லாதது படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு?
காமெடி ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த ஆண்பாவம் பொல்லாதது படம் வருகின்ற 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் திருமணம் செய்துகொள்ளும் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இடையே ஏற்படும் பிரச்னைகள் காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
அபோது நீதிமன்றத்தில் ஒரு விவாகரத்து வழக்கு எப்படி எல்லாம் விசாரிக்கப்படும் என்பது குறித்து அந்த ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… டிக்கெட் முன்பதிவை தொடங்கியது பைசன் காளமாடன் படக்குழு – இயக்குநர் மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட்
ஆண்பாவம் பொல்லாதது படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It’s here! romantic riot begins.. #AanPaavamPollathathu Trailer OUT NOW! don’t miss the vibe💥
▶️ https://t.co/TuyiNJumD1#AanPaavamPollathathu releasing worldwide on October 31#APP @rio_raj @imalavikamanoj @DrumsticksProd @agscinemas @blacksheepoffl @kalaiyinkural… pic.twitter.com/fvnMqLlUDO
— AGS Cinemas (@agscinemas) October 16, 2025
Also Read… வணங்கான் படத்தில் மிஸ்ஸானது சூர்யா 46-ல் கிடைச்சுடுச்சு – நடிகை மமிதா பைஜூ