நடிகர் ரியோ ராஜின் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ

தொலைக்காட்சியில் விஜேவாக வேலை செய்யும் போதே தனக்கு என ரசிகர்களிடையே ஒரு வரவேற்பை பெற்றவர். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் நாயகனாக நடிக்கத் தொடங்கி தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ரியோ ராஜின் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ

ஆண் பாவம் பொல்லாதது

Published: 

08 Jun 2025 18:05 PM

விஜய் தொலைக்காட்சியில் வெளியான கனா காணும் காலங்கள் சீரியலில் நடிகராக அறிமுகம் ஆனவர் ரியோ ராஜ் (Actor Rio Raj). அதனைத் தொடர்ந்து வாய்ப்புக்காக போராடித் திரிந்தவர் பின்னர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியகளை தொகுத்து வழங்கி வந்தார். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரியோ ராஜ் அப்போதே தமிழக மக்களிடையே வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழகத்தில் உள்ள மூலை முடுக்கு எங்கும் பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பின்பு 2019-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் வெளியான நெச்சமுண்டு நேர்மையுண்ட எனற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

இந்த நிலையில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஆண்பாவம் பொல்லாதது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கி வருகிறார். முன்னதாக நடிகர் ரியோ ராஜ் உடன் இணைந்து ஜோ படத்தில் நடித்த நடிகை மாளவிகா மனோஜ் நாயகியாக நடித்து உள்ளார்.

ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ஃபர்ஸ் சிங்கிள்:

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்திலிருந்து ஜோடிப் பொருத்தம் என்ற பாடல் வருகின்ற ஜூன் மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

முன்னதாக நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஸ்வீட் ஹார்ட். மிகவும் வித்யாசமான கதைக்களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் நடிகர் ரியோ ராஜிற்கு இன்னும் பெரிய அளவிற்கு ஒரு படம் வெற்றியைக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!
ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?
பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!