ரீ ரிலீஸாகும் விஜயின் திருப்பாச்சி படம்? வைரலாகும் பதிவு
Thirupaachi Movie Re Release Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் திருப்பாச்சி. இந்தப் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருப்பாச்சி படம்
தமிழ் சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் திருப்பாச்சி. ஆக்ஷன் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் பேரரசு எழுதி இயக்கி இருந்தார். இந்த திருப்பாச்சி படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மல்லிகா, லிவிங்ஸ்டன், பசுபதி, கோட்டா சீனிவாச ராவ், மனோஜ் கே. ஜெயன், பெஞ்சமின், யுகேந்திரன், ஆர்யன், வையாபுரி, விஜயன், வினோத் ராஜ், ராஜ்ய லட்சுமி, எம்.என்.ராஜம், நெல்லை சிவா, எம்.எஸ்.பாஸ்கர், சசிகுமார் சுப்ரமணி, மீனாள், குமரிமுத்து, பாத்திமா பாபு, கராத்தே ராஜா, சம்பத் ராம், தேனி குஞ்சரம்மாள், பாரதி, கூல் சுரேஷ், வெள்ளை சுப்பையா, பெரிய கருப்பு தேவர், கத்தரிக்கோல் மனோகர், பாலா சிங், சாயா சிங் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தீனா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் ரீ ரிலீஸாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரீ ரிலீஸாகும் விஜயின் திருப்பாச்சி படம்?
பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் ‘திருப்பாச்சி’ திரைப்படத்தின் 4K HD பதிப்பைத் தங்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. இது திரைப்படம் மீண்டும் திரையிடப்படவிருப்பதற்கான ஒரு அறிகுறியாகும். பொதுவாக, ஒரு திரைப்படம் மீண்டும் வெளியிடத் தயாராகும் போது, தயாரிப்பாளர்கள் முதலில் அதன் 4K HD மாஸ்டர் பதிப்பைத் தங்களின் யூடியூப் சேனலில் பதிவேற்றுவார்கள். அதன்பிறகு, புதிய HD பிரிண்ட் திரையரங்குகளுக்கு விநியோகிக்கத் தொடங்கும். முதல் படி இப்போது முடிந்துவிட்டது. இனி மீதமிருப்பது பிரம்மாண்டமான வெளியீடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… தேரே இஸ்க் மெய்ன் டூ சிறை வரை… நாளை ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Super Good Films has released the 4K HD version of Thirupaachi on their official YouTube channel.
⁰This is a clear sign that a re-release is on the way 💥🔥 Usually, when a film is gearing up for a re-release, the producers first upload the 4K HD master on their YouTube channel.… pic.twitter.com/4D2qI6qX29— KARTHIK DP (@dp_karthik) January 24, 2026
Also Read… ரீ ரிலீஸாகும் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த லவ் ஸ்டோரி… எப்போது தெரியுமா?