மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்? வைரலாகும் தகவல்
Actress Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு இன்னும் தமிழ் சினிமா பக்கம் எட்டிபார்க்கவில்லை என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின்
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பின்பு அங்கு நாயகியாக நடிக்கத் தொடங்கியவர் நடிகை கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh). தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் 2015-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீமராஜா, சாமி 2, சண்டகோழி 2, சர்க்கார், அண்ணாத்த, சாணி காதிதம், மாமன்னன், சைரன் மற்றும் ரகு தாத்தா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இறுதியாக தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ரகு தாத்தா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடித்து வந்தாலும் தமிழில் இன்னும் அவரது படங்கள் எதுவும் வெளியாகாத்தால் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் குறித்த புதிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
நாயகியை மையப்படுத்தி எடுக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமான கீர்த்தி சுரேஷ்:
அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தற்போது ரிவால்வர் ரீட்டா மற்றும் கன்னிவெடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் அப்டேட்களை எதிர்பார்த்து கத்திருந்த ரசிகர்களுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாக உள்ள நாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இந்த நிலையில் இந்த செய்தியைப் பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… கூலி படத்தில் மாஸ் காட்டிய உபேந்திராவின் மனைவி அஜித் பட நடிகைதானாம்… யார் தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வெற்றி எனக்கு மிகவும் உதவியது – ஏ.ஆர்.முருகதாஸ்