இந்தி மொழியில் நடித்தாலும்.. பல மொழி வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்!
Actress Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் இறுதியாக பேபி ஜான் என்ற இந்திப் படத்தில் நடித்திருந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்தாக தான் இந்த ஆண்டு ஒரு இந்திப் படத்தில் கையெழுத்திட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மற்ற மொழிப் படங்களில் நடிப்பது குறித்தும் பேசியுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பேபி ஜான். இந்தப் படத்தின் மூலமாக நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெரி படத்தின் ரீமேக் தான் பேபி ஜான். இந்தப் படத்தை இயக்குநர் காலீஸ் என்பவர் இயக்கியிருந்தார். இதில் நடிகர் வருண் தவான் நாயகனாக நடிக்க இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வாமிகா கபி , ஜாரா ஜியன்னா மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் அட்லி இந்தப் படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தமிழில் விஜயின் நடிப்பில் வெளியான தெறி படத்திற்கு கிடைத்த வரவேற்பு அளவிற்கு இந்தியில் பேபி ஜான் படத்திற்கு கிடைக்கவில்லை. மாறாக படம் கலவையான விமர்சனத்தையேப் பெற்றது. மேலும் இந்தியில் வெளியான இந்த பேபி ஜான் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மற்றொரு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு:
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திக்கு அளித்தப் பேட்டி தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அதன்படி அந்தப் பேட்டியில் இந்தாவில் உள்ள பல மொழிகளில் நடிப்பது குறித்தும் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் பல மொழிகளில் நடிப்பது சவாலாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இந்தி மொழியில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினாலும் மற்ற மொழிப் படங்களில் நடிப்பதில் இருந்து விலக மாட்டேன் என்றும் அதே நேரத்தில் இந்த ஆண்டு மற்றொரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இரண்டு தெலுங்கு படங்களிலும் ஒரு மலையாளப் படத்திலும் இந்த ஆண்டு நடிக்கக்கூடும் என்றும் வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் அக்கா வெப் சீரிஸ்:
தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் தன்னை முன்னணி நடிகையாக தடம் பதித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தன்னுடைய தடத்தைப் பதிக்க உள்ளார். அதன்படி நெட்ஃபிளிக்ஸ்டில் வெளியாக உள்ள அக்கா என்ற இணையதள தொடர் பான் இந்திய அளவில் நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பை உயர்த்திக் காட்டும் என்று ரசிகரக்ள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.