Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தி சினிமாவில் மீண்டும் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்…!

Actress Keerthy Suresh: தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இறுதியாக தமிழில் நடித்தப் படம் ரகு தாத்தா. இதனை தொடர்ந்து இந்தியில் இவர் பேபி ஜான் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது பாலிவுட் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தி சினிமாவில் மீண்டும் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்…!
நடிகை கீர்த்தி சுரேஷ்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 15 May 2025 12:05 PM

நடிகை கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) 2000 ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கி இருந்த நிலையில் நடிகர் மோகன்லால் முன்னணி வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து 2015-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை கீர்த்தி சுரேஷ். இயக்குநர் ஏ.எல்.விஜய் இயகத்தில் நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன மாயம் படத்தில் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களான தனுஷ், விஜய், விக்ரம், சூர்யா, ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மலையாள சினிமா மூலம் நடிகையாக அறிமுகம் ஆனாலும் இவர் அதிகமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிவாவில்தான் படங்களை நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் நாயகியாக வலம் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். அதன்படி இவர் கடந்த ஆண்டு வெளியான பேபி ஜான் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

இந்தப் படம் தமிழில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இந்தப் படத்தை இந்தியில் இயக்குநர் அட்லி தயாரித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தகது.

நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டா பதிவு:

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அக்கா என்ற வெப் தொடரில் நடித்து வருகிறா. இது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இரண்டாவது பாலிவுட் படத்திற்காக இயக்குநர் ஆதித்யா நிம்பல்கர் உடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர் முன்னதகா செக்டார் 36 என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோடையில் முடி உதிர்தல் பிரச்சனையா? இதை செய்தால் தடுக்கலாம்!
கோடையில் முடி உதிர்தல் பிரச்சனையா? இதை செய்தால் தடுக்கலாம்!...
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? - இந்த 3 பேரின் நட்பை கைவிடுங்கள்!
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? - இந்த 3 பேரின் நட்பை கைவிடுங்கள்!...
மது, சிகரெட் பழக்கத்தை விட்டு 5 வருஷம் ஆச்சு... விஷால் ஓபன் டாக்
மது, சிகரெட் பழக்கத்தை விட்டு 5 வருஷம் ஆச்சு... விஷால் ஓபன் டாக்...
செல்வ வளம் பெருக வேண்டுமா? - லட்சுமி குபேரரை வழிபடுங்க!
செல்வ வளம் பெருக வேண்டுமா? - லட்சுமி குபேரரை வழிபடுங்க!...
வங்கதேச வீரர் IPLல் எதற்கு? DC அணிக்கு எதிராக ரசிகர்கள் கேள்வி!
வங்கதேச வீரர் IPLல் எதற்கு? DC அணிக்கு எதிராக ரசிகர்கள் கேள்வி!...
மூத்த குடிமக்களுக்கான எஃப்டி வட்டியை உயர்த்திய வங்கிகள்!
மூத்த குடிமக்களுக்கான எஃப்டி வட்டியை உயர்த்திய வங்கிகள்!...
பாஜகவுடன் கூட்டணி இல்லை.. TVK சிடிஆர் நிர்மல் குமார் உறுதி!
பாஜகவுடன் கூட்டணி இல்லை.. TVK சிடிஆர் நிர்மல் குமார் உறுதி!...
திருமண வாழ்க்கையை காப்பாற்ற என் பெற்றோரை கூட பிரிந்து இருந்தேன்..
திருமண வாழ்க்கையை காப்பாற்ற என் பெற்றோரை கூட பிரிந்து இருந்தேன்.....
நாளை வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட்.. பார்ப்பது எப்படி?
நாளை வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட்.. பார்ப்பது எப்படி?...
ராணுவ வீரர்களுக்கு 8 வயது சிறுவன் நன்கொடை.. குவியும் பாராட்டு
ராணுவ வீரர்களுக்கு 8 வயது சிறுவன் நன்கொடை.. குவியும் பாராட்டு...
புதிய இ பாஸ்போர்ட் திட்டத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு!
புதிய இ பாஸ்போர்ட் திட்டத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு!...