நிஜமாவே செருப்பால அடிச்சாங்க… நடிகை சோனியா அகர்வால் குறித்து ரவி கிருஷ்ணா ஓபன் டாக்

7 G Rainbow Colony: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் 7 ஜி ரெயின்போ காலனி. இந்தப் படத்தில் நடிகை சோனியா அகர்வால் உடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகர் ரவி கிருஷ்ணா பேட்டி ஒன்றில் பேசியது வைரலாகி வருகின்றது.

நிஜமாவே செருப்பால அடிச்சாங்க... நடிகை சோனியா அகர்வால் குறித்து ரவி கிருஷ்ணா ஓபன் டாக்

7 ஜி ரெயின்போ காலனி

Published: 

16 Jun 2025 18:43 PM

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 7 ஜி ரெயின்போ காலனி. இந்தப் படத்தில் நடித்த நாயகன் ரவி கிருஷ்ணா (Ravi Krishna) மற்றும் நாயகி சோனியா அகர்வால் (Sonia Agarwal) இருவரும் முன்னதாக பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர்கள் வெளிப்படையாக பேசியது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. அதில் அடிக்கும் காட்சியில் நடிகர் ரவி கிருஷ்ணாவை நடிகை சோனியா அகர்வால் நிஜமாகவே அடித்துவிட்டார் என்று தெரிவித்தனர். அதிலும் செருப்பால் அடித்த காட்சி அனைத்தும் அவ்வள தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நிஜமாகவே அடித்தார்.

அப்போதான் நீ அடிக்கிறது கூட வலிச்சாலும் பரவா இல்ல டயலாக் மட்டும் சரியா பேசிடு. இல்லனா இன்னொரு டேக்ல நான் உன்கிட்ட அடிவாங்குற மாதிரி இருக்கும் என்று கூறினேன் என நடிகர் ரவி கிருஷ்ணா கூறியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெறும் 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் பாகம் 2:

முதல் பாகம் வெளியாகி சுமார் 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இயக்குநர் செல்வராகவன் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது படத்தின் அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் முதல் பாகத்தில் நடிகை சோனியா அகர்வால் இறந்துவிடும் காட்சி இருக்கிறது. இதனால் இவர் இரண்டாம் பாகத்தில் இல்லை என்பது உறுதியான தகவல். மேலும் நடிகர் ரவி கிருஷ்ணாவிற்கு இரண்டாம் பாகத்தில் பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இரண்டாம் பாகத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மட்டும் தான் உறுதியான தகவலாக இருந்த நிலையில் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த எந்த அதிகாரப்பூரவ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் இந்த ஆண்டு தீபாவளி அல்லது கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

7 ஜி ரெயின்போ காலனி 2 குறித்த செல்வராகவனின் எக்ஸ் தள பதிவு: