Rashmika Mandanna: A.R.முருகதாஸ் சார் என்னிடம் சொன்னது வேற.. சிக்கந்தர் பட ஸ்கிரிப்டில் பல மாற்றம் இருந்தது – ராஷ்மிகா மந்தனா!
Rashmika Mandanna About Sikandar Script Changes: பான் இந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் நடிப்பில் கடந்த 2025ல் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படம் வெளியாகியிருந்தது. அதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சல்மான் கான் நடித்திருந்தார். அந்த படத்தின் ஸ்கிரிப்ட் மாற்றம் குறித்து ராஷ்மிகா மனம் திறந்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) பான் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார். இவர் தமிழில் கார்த்தி (karthi) மற்றும் தளபதி விஜய் (Thalapathy Vijay) போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இவர் தற்போது பான் இந்திய நடிகைகளில் ஒருவராகவும் இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் பாலிவுட் சினிமாவில் வெளியான படம் சிக்கந்தர் (Sikandar). இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR. Murugadass) மற்றும் சல்மான் கான் (Salman Khan) கூட்டணியில் உருவான இப்படத்தில், சல்மானுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார்.
இப்படமானது பெரும் தோல்வியை சந்தித்திருந்தது என்பது அனைவருக்குமே தெரிந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்கிரிப்டில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பராசக்தியா? வா வாத்தியாரா? சைலண்டாக பொங்கல் ரேஸில் வெற்றிபெற்ற ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில்..!
சிக்கந்தர் திரைப்படம் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா, “எனக்கு நினைவிருக்கிறது சிக்கந்தர் படத்தின்போது ஏ.ஆர். முருகதாஸ் சாரிடம் பேசியிருக்கேன், அதற்கு பின் அந்த படத்தில் பல மாற்றங்கள் இருந்தது. ஆனால எனக்கு முதலில் தெரிவிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் மிகவும் வித்தியாசமாக இருந்தது.
இதையும் படிங்க: அந்த பெரிய நட்சத்திர நடிகர் என்னை தொட முயன்றார்.. உடனடியாக அவரை அறைந்தேன்- பூஜா ஹெக்டே பரபரப்பு பேட்டி!
மேலும் சினிமாவில் அது எல்லாமே பொதுவானதுதான். நீங்க ஸ்கிரிப்டாக ஒரு கதையை கேட்டுருப்பீர்கள் அதை எடிட் செய்தபின், ஷூட்டிங்கில், ரிலீஸ் தேதி கிட்ட நெருங்குவதால் அதில் பல மாற்றங்கள் இருக்கும். இது மிகவும் பொதுவான விஷயம்” என அவர் அதில் வெளிப்படையாக பேசியிருந்தார்.
சிக்கந்தர் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா பேசிய வீடியோ பதிவு :
#RashmikaMandanna Recent
– I spoke with #ARMurugadoss sir earlier; what happened later was very different. But when I first heard the script, it was quite unique.
– Script changes during shooting and editing are common.#SalmanKhanpic.twitter.com/Smu1kSmfyQ— Movie Tamil (@_MovieTamil) January 19, 2026
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புது படங்களில் பிசியாக இருந்துவருகிறார். இவர் வீராங்கனையாக மைசா என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் சிங்கிள் கதாநாயகியாக அசத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காக்டைல் 2 என்ற இந்தி படத்திலும் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றுவருகிறது. மேலும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், மேலும் இவர் புது படங்களில் எதுவும் ஒப்பந்தமாகவில்லை. இது குறித்த தகவல் தற்போது வைரலாகிவருகிறது.