அனிமல் படத்தின் பார்ட் 2 எப்போது தொடங்கும் – நடிகர் ரன்பீர் கபூர் ஓபன் டாக்
Actor Ranbir Kapoor: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்பீர் கபூர். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அனிமல்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்பீர் கபூர். இவர் படங்களுக்காக மெனக்கெடுவது ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. பான் இந்திய சினிமாவைப் பொருத்தவரை ஒவ்வொரு மொழியிலும் சிறப்பாக நடிக்கும் நடிகர்களை மற்ற மொழியில் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடத் தவறியது இல்லை. அந்த வகையில் இந்தி சினிமாவில் தனது நடிப்பின் மூலம் பிரலமானவர் நடிகர் ரன்வீர் கபூர். இவரது நடிப்பில் இந்தி சினிமாவில் வெளியாகும் படங்கள் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அனிமல். இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்து இருந்தார்.
மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா எழுதி இயக்கி இருந்தார். ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் உடன் இணைந்து நடிகர்கள் அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா, த்ரிப்தி த்மிர், சாரு சங்கர், சக்தி கபூர், பிரேம் சோப்ரா, பப்லு பிரிதிவீராஜ், சௌரப் சச்தேவா, மது ராஜா, சுரேஷ் ஓபராய், சலோனி பத்ரா, நீவன் வேத், அன்ஷுல் சவுகான், ஈவா சிப்பர், சித்தாந்த் கர்னிக், மாகந்தி ஸ்ரீநாத், உபேந்திரா லிமாயே, மேத்யூ வர்கீஸ், இந்திரா கிருஷ்ணன், குணால் தாக்கூர், மிருண்மயி காட்போல், டேவி கிரேவால், விவேக் சர்மா, ககன்தீப் சிங், கவால்பிரீத் சிங், அமன்ஜோத் சிங், மன்ஜோத் சிங், அவ்தீப் சித்து, கமல்ஜீத் ராணா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
அனிமல் படத்தின் பார்ட் 2 எப்போது தொடங்கும்?
இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ஆல்ஃபா மேன் என்று கூறப்படும் குணம் கொண்ட நபராக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது பல சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனால் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் ரன்பீர் கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, சந்தீப் ரெட்டி வங்கா மற்றொரு படத்தில் பணியாற்றி வருகிறார். ‘அனிமல் பார்க்’ திரைப்படம் 2027-ல் தொடங்கும். அவர் இதை மூன்று பாகங்கள் கொண்ட படமாகத் திட்டமிட்டுள்ளார், அதன் இரண்டாம் பாகத்திற்கு ‘அனிமல் பார்க்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகன் மற்றும் வில்லன் ஆகிய இரு கதாபாத்திரங்களிலும் நடிக்க நான் ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… ரசிகரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்… வைரலாகும் போட்டோ
இணையத்தில் வைரலாகும் ரன்பீர் கபூர் பேச்சு:
#RanbirKapoor recent
– #SandeepReddyVanga is working on another film (#Spirit), #AnimalPark will begin in 2027.
– He plans it as a three-part film, with the second part titled #Animal Park.
– I’m excited to play both the protagonist and antagonist.pic.twitter.com/wflJ1HqLi8— Movie Tamil (@_MovieTamil) January 26, 2026
Also Read… சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் நடிகர் ரியோ ராஜ் – வைரலாகும் தகவல்