Rashmika Mandanna: ராஷ்மிகா மந்தனாவின் பர்த்டே.. ஸ்பெஷல் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ரணபாலி படக்குழு!

Rashmika Mandanna Birthday: நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்த்துவருகிறார். இவர் இன்று 2026 ஏப்ரல் 5ம் தேதியில் தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில், இதன் ஸ்பெஷலாக ஜெயம்மா கதாபாத்திர மேக்கிங் வீடியோவை ரணபாலி படக்குழு வெளியிட்டுள்ளது.

Rashmika Mandanna: ராஷ்மிகா மந்தனாவின் பர்த்டே.. ஸ்பெஷல் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ரணபாலி படக்குழு!

ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி படம்

Updated On: 

05 Apr 2026 13:12 PM

 IST

தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக தி கேர்ள்பிரண்ட் திரைப்படம் (The Girlfriend) வெளியாகியிருந்த நிலையில், இது இவருக்கு தெலுங்கானா அரசின் விருதை வென்றுகொடுத்தது. அந்த வகையில் தற்போதும் தெலுங்கில் படங்களில் நடித்துவருகிறார். இவர் சமீபத்தில், தனது நண்பரும், நீண்டநாள் காதலருமான விஜய் தேவரகொண்டாவை (Vijay Deverakonda) திருமணம் செய்துகொண்டார். இவர் தற்போது திருமணத்திற்கு பிறகும், படங்களில் நாயகியாகவே நடித்துவருகிறார். அந்த வகையில், கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின், விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக ரணபாலி (Ranabaali) என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இப்படம் 60ஸ் நடந்த உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று 2026 ஏப்ரல் 05ம் தேதியில், ராஷ்மிகா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அந்த வகையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, ரணபாலி படத்தில் இவர் நடிக்கும் “ஜெயம்மா” (Jayamma) கதாபாத்திர மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: வாரிசு பட செட்-ல நடத்த நகைச்சுவை சம்பவம் – ஓபனாக சொன்ன ராஷ்மிகா மந்தனா!

ராஷ்மிகாவின் ஜெயம்மா கதாபாத்திர மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ரணபாலி படக்குழு :

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஜோடியாக நடித்துவரும் புது படம்தான் ரணபாலி. இதை தெலுங்கு இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படமானது 60ஸ் காலத்தில், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா “ஜெயம்மா” என்ற வேடத்தில் நடிக்க, விஜய் தேவரகொண்டா “ரணபாலி” என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆக்ஷன் நாயகனாக டோவினோ தாமஸ்.. வெளியானது பள்ளிச்சட்டம்பி பட அதிரடி ட்ரெய்லர்!

இப்படமானது பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தை வரும் 2026 செப்டம்பர் 11ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படமானது தெலுங்கு மொழியில் மட்டுமில்லாமல், தமிழ், இந்தி மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
LIK Movie: பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ படத்திலிருந்து ‘பூக்கட்டும்’ லிரிக்கல் பாடல் வெளியீடு!
Mohanlal: ரஜினியின் ஜெயிலர் 2 பட ஷூட்டிங்கை முடித்த மோகன்லால்? – வைரலாகும் தகவல்!
Trisha Krishnan: சினிமாவிலிருந்து விலகிவிட்டேனா? தொழிலதிபரை திருமணம் செய்து நான்கு குழந்தை- விமர்சனங்களுக்கு திரிஷா போட்ட பதிவு!
Allu Arjun: அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியாகும் AA22xA6 பட டைட்டில் போஸ்டர் – படக்குழு அறிவிப்பு!
தேர்தல் முடியும்வரை.. TN2026 பட ரிலீஸை நிறுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
இந்த புகைப்படத்தில் கிருஷ்ணன் கெட்டப்பில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுதா? சீரியல் நடிகை டூ சினிமா நடிகையானவர் இவர்!
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்