Parasakthi : பராசக்தி படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… சிறப்பு ரோலில் நடிக்கும் பிரபலங்கள்!

Parasakthi Movie Update : சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் படம் பராசக்தி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், சிறப்பு கதாபாத்திரத்தில் பிரபலங்கள் சிலர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அது யார் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Parasakthi : பராசக்தி படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்... சிறப்பு ரோலில் நடிக்கும் பிரபலங்கள்!

பராசக்தி திரைப்படம்

Published: 

16 Aug 2025 17:37 PM

கோலிவுட் சினிமாவில் இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் பராசக்தி (Parasakthi). இதில் முன்னணி வேடத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்துள்ளார். இந்தப் படமானது சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக உருவாகிவருகிறது. அவருடன் நடிகர்கள் ரவி மோகன், அதர்வா (Atharvaa), ஸ்ரீலீலா (Sreeleela) உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். மேலும் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படமானது கடந்த 1960 ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் சிறப்பு வேடத்தில் இரு நடிகர்கள் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி (Rana Daggubati) நடித்துவருவதாகக் கூறப்பட்டது. மேலும் பராசக்தி பட ஷூட்டிங்கில் அவர் இருக்கும்படியான வீடியோவும் வைரலாகி வந்தது. இந்நிலையில், இவரை அடுத்ததாக நடிகர் அப்பாஸும் (Abbas) இப்படத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஒரு வேலை இவர் இப்படத்தில் நடித்திருந்தால் சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இவர் ஜி.வி. பிரகாஷின் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முதல் சந்திப்பு.. கண்ணீர் விடாமல் இருக்கமுடியவில்லை தலைவா! – வைரலாகும் விக்னேஷ் சிவனின் பதிவு!

பராசக்தி படக்குழு வெளியிட்ட பொள்ளாச்சி ஷூட்டிங் புகைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த பராசக்தி படத்தின் ஷூட்டிங்கானது இறுதிக்கட்ட பணிகளிலிருந்து வருகிறது. சுமார் 90 சதவீதம் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் நிலையில், இப்படத்திற்காக சுமார் 4 பாடல்களின் வேலைகளை முடித்துவிட்டதாகவும் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த படமானது திராவிடம் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகிவருகிறதாம். இப்படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்துடன் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படம் சுமார் ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகிவருகிறதாம்.

இதையும் படிங்க : 2026 ஆண்டு பொங்கல் ரேஸில் இணைகிறதா சூர்யாவின் கருப்பு திரைப்படம்?

பராசக்தி படத்தின் ரிலீஸ்

இந்த பராசக்தி படமானது முற்றிலும் ரெட்ரோ காலகட்ட படமாக உருவாகிவருகிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறதாம். இப்படத்தின் ஷூட்டிங் தமிழகம், இலங்கை போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிவரும் நிலையில், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.