Peddi: புது ரிலீஸ் தேதியை லாக் செய்தது ராம் சரணின் ‘பெடி’ படக்குழு – விவரங்கள் இதோ!

Peddi Movie New Release Date: தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் நாயகனாக இருந்துவருபவர் ராம் சரண். இவரின் நடிப்பில் 16வது திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் பெடி திரைப்படம். இந்த படத்தின் முதல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின், ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Peddi: புது ரிலீஸ் தேதியை லாக் செய்தது ராம் சரணின் பெடி படக்குழு - விவரங்கள் இதோ!

பெடி திரைப்படம்

Updated On: 

01 May 2026 18:15 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக கருத்தப்பட்டவருபவர் ராம் சரண் (Ram Charan). இவர் என்னதான் தெலுங்கு நடிகராகி இருந்தாலும், இவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கேம் செஞ்சார் (Game Changer) படத்தை தமிழ் இயக்குநர் எஸ்.சங்கர் இயக்கியிருந்தார். இப்படமானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கதைவாரியாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அந்த வகையில் இப்படத்தை அடுத்தக்க ராம் சரணின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவந்த திரைப்படம்தான் பெடி (Peddi). இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்துள்ளார். இதை உப்பென, ரங்கஸ்தலம் போன்ற படங்களை இயக்கியிருந்த புச்சி பாபு சனாதான் (Buchi Babu Sana) இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேல் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது படத்தின் பாடல்கள் காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. மேலும் இப்படக்குழு இன்று 2026 மே 1ம் தேதியில், செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நிலையில், அதில் பெடி படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி இப்படமானது வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கருப்பு படத்தில் நடித்ததையே மறந்துவிட்டேன்… ரசிகருக்கு கியூட்டாக பதிலளித்த த்ரிஷா கிருஷ்ணன்

ராம் சரணின் பெடி படத்தின் புது ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்த பதிவு:

ராம் சரணின் பெடி படத்தில் சிறப்பு பாடலில் தமிழ் நடிகை:

தற்போது வெளியாகிவரும் பிரம்மாண்டமான கமர்ஷியல் திரைப்படங்களில், சிறப்பு நடனம் ஒன்று அத்தியாவசியமாக மாறிவிட்டது. அந்த வகையில் தளபதி விஜய் முதல் அஜித் போன்ற பல்வேறு நடிகர்களின் படங்களில் நடிகைகளின் சிறப்பு நடனம் ஒன்று இருந்துவருகிறது. அந்த வகையில் ராம் சரணின் பெடி திரைப்படத்திலும் சிறப்பு பாடல் ஒன்றில் தமிழ் நடிகை ஒருவர் நடனமாடியுள்ளார். அந்த நடிகை வேறுயாருமில்லை, கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன்தான்.

இதையும் படிங்க: ஆச்சாலே மச்ச மக்கமாலே.. ஒரு வருடத்தை கடந்தது சசிகுமார் – சிம்ரனின் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம்!

பெடி படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமையில், ராம் சரணுடன் இணைந்து சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். இவர் நடனமாடுவது குறித்த படப்பிடிப்பு காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்திருந்தது. அந்த வகையில் இதில் ஸ்ருதிஹாசன்தான் நடனமாடுகிறார் என உறுதியானது. இப்படமானது மிகவும் பிரம்மாண்டமான பைல்வான் கதைக்களத்தில் தயாராகிவரட்டும் நிலையில், ராம் சரணுக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..