Coolie : ரஜினிகாந்தின் கூலி – வெளியான ‘கொக்கி’ லிரிக்கல் பாடல்!

Coolie Movie Kokki Song : இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், பான் இந்திய படமாக வெளியாகியிருந்தது கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திலிருந்து திரையரங்குகளில் அனைவராலும் ரசிக்கப்பட்ட பாடல் கொக்கி. இப்பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Coolie : ரஜினிகாந்தின் கூலி - வெளியான கொக்கி லிரிக்கல் பாடல்!

கொக்கி லிரிக்கல் பாடல்

Published: 

22 Aug 2025 19:55 PM

தமிழ் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி கதாநாயகனாக இப்படத்தில் நடிக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்தார். இந்த படத்தை சுமார் ரூ 355 கோடியில், தென்னிந்தியப் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அதிரடி ஆக்ஷ்ன் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் நடிகர்கள் நாகார்ஜுனா (Nagarjuna), சௌபின் ஷாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஆமிர் கான் மற்றும் ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி முதல் நாளிலேயே சுமார் ரூ 151 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது

இந்நிலையில், இப்படத்துக்கு பான் இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து கொக்கி (Kokki) என்ற லிரிக்கல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த பாடலானது திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து படக்குழு இந்தப் பாடலை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க :  டியூட் படத்தின் கலக்கல் அப்டேட்.. முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?

கொக்கி லிரிக்கல் பாடலை வெளியிட்ட கூலி திரைபடக்குழு

ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் மொத வசூல் எவ்வளவு ?

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த்தின் கூட்டணியில் வெளியாகியிருந்த படம் கூலி. இப்படத்தில் ரஜினிகாந்த் அதிரடி ஆக்ஷ்ன் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படமானது இவரின் நடிப்பில் வெளியான 171வது படமாகும். இப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த கூலி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து 8 பாடல்கள் வெளியாகியிருந்தது. மேலும் திரையரங்கில் கூலி படத்தைப் பார்க்கும்போது, இவரின் பின்னணி இசையும்  மிகவும் அருமையாகவே இருந்தது என்றே கூறலாம்.

இதையும் படிங்க : கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ – வெளியான சூப்பர் அப்டேட் !

இந்த கூலி படமானது 4 நாட்களில் சுமார் ரூ 404 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாகப் படக்குழு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இதுவரை, இந்த கூலி படமானது சுமார் ரூ 456 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூலி படமானது வெளியாகி 2 வாரங்களான நிலையில், இன்று வரையிலும் திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.