Coolie : 36 ஆண்டுகளுக்குப் பின்… ரஜினிகாந்த்தின் ‘கூலி’ படம் குறித்து வெளியான அப்டேட்!

Coolie Movie Updates : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை 2025, ஆகஸ்ட் 2ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் தணிக்கை சான்றிதழ் குறித்துப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Coolie : 36 ஆண்டுகளுக்குப் பின்... ரஜினிகாந்த்தின் கூலி படம் குறித்து வெளியான அப்டேட்!

கூலி திரைப்படம்

Published: 

01 Aug 2025 20:17 PM

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) . இவரின் நடிப்பில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி (Coolie) திரைப்படம். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு “தலைவர்171” என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) லியோ படத்துக்கு பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தில் இணைந்தார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்க, சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படமானது ரஜினிகாந்த்தின் நடிப்பில் பான் இந்திய மொழிகளை ஒரே நாளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் அமீர்கான், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சவுபின் ஷாஹிர் என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு நாளை 2025, ஆகஸ்ட் 2ம் தேதியில் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவைப் படக்குழு சென்னையில் நடத்தவுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நேரத்தையும், கூலி படத்தின் தணிக்கை சான்றிதழ் (Censor certificate) குறித்தும் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : கூலி படத்தின் டிரெய்லர் கூட இன்னும் வெளியாகல… – அனிருத் பகிர்ந்த தகவல்

கூலி திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் பதிவு :

ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்திற்கு சென்சார் குழு “ஏ” தரச் சான்றிதழை வழங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் படத்திற்குப் பல ஆண்டுகளுக்குப் பின் “ஏ” சான்றிதழ் கிடைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ரஜினிக்காக ஒத்தி வைக்கப்பட்ட லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட கிளிம்ப்ஸ் வீடியோ!

ரஜினிகாந்த்தின் நடிப்பில் இறுதியாக, கடந்த 1989ம் ஆண்டு வெளியான சிவா என்ற படத்திற்கு “ஏ” சான்றிதழ் கிடைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து 36 ஆண்டுகளுக்குப் பின், இந்த கூலி படத்திற்கு ஏ சான்றிதழைத் தணிக்கை குழு கொடுத்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது :

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த்தின் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் 2025 ஆகஸ்ட் 2ம் தேதியில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் முன்பே அறிவித்திருந்தார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு, கூலி படத்தின் ட்ரெய்லர் நாளை 2025 ஆகஸ்ட் 2ம் தேதி , இரவு 7 மணியளவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகிய இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.