அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜனின் பட டைட்டிலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. டைட்டில் என்ன தெரியுமா?

Abhishan Jeevinth Movie Title Teaser: தமிழில் இயக்குநராக அறிமுகமாகி, தனது 2வது படத்திலே கதாநாயகனாக அறிமுகமானவர்தான் அபிஷன் ஜீவிந்த். இவர் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள முதல் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துவரும் நிலையில், இன்று இந்த படத்தின் டைட்டில் டீசரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

அபிஷன் ஜீவிந்த் - அனஸ்வரா ராஜனின் பட டைட்டிலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. டைட்டில் என்ன தெரியுமா?

அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வர ராஜன்

Published: 

21 Nov 2025 19:40 PM

 IST

சசிகுமார் (Sasikumar) மற்றும் சிம்ரனின் (Simran) கூட்டணியில் கடந்த 2025 மே மாதத்தில் வெளியான திரைப்படம்தான் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜிவிந்த் (Abhishan Jeevinth) இப்படமானது வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பாராத வரவேற்பைப் பெற்றிருந்தது . இப்படத்தின் ரிலீஸ் போதுதான் சூர்யாவின் ரெட்ரோ மற்றும் நானியின் ஹிட் 3 போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. அந்த வகையிலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இயக்குநர் அபிஷன் ஜிவிந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில், நடிகராகவும் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படத்தை அடுத்ததாக சினிமாவில் தனது 2 வது படத்திலே ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் இந்த படமானது 7வது படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) நடித்துள்ளார்.

தமிழில் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த படமானது முழுக்க காதல் கதைக்களத்துடன் தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இதை இன்று 2025 நவம்பர் 21ம் தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு படக்குழு “வித் லவ்” (With Love) என்று டைட்டிலை வைத்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: லாஸ்ட் குட்டி ஸ்டோரி… தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட ‘இசைவெளியீட்டு விழா’ எப்போது? எங்கு நடைபெறுகிறது.. அறிவிப்பு இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட அபிஷன் ஜீவிந்தின் புது பட டைட்டில் டீசர் பதிவு :

 

அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜனின் வித் லவ் பட ரிலீஸ் எப்போது?

இந்த வித் லவ் படத்தை அறிமுக இயக்குநரான மதன் இயக்கியுள்ளார். இந்த படமானது கிட்டத்தட்ட நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தின் கதை கான்சப்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடந்த 2025 ஜூலை மாதத்தில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 45 நாட்களில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட வேளைகளில் இருந்துவருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: அமரன் பட திரையிடல்… சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அமரன் படக்குழு!

இவர் ஏற்கனவே அபிஷன் ஜீவிந்தின் டூரிஸ்ட் பேமிலி படத்திற்கும் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி அல்லது 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிட்டு வருகிறதாம். இந்நிலையில் டைட்டில் டீசரை தொடர்ந்து படத்தின் பாடல்கள் தொடர்பான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போன் பயனாளர்களுக்கு மத்திய அரசின் கடும் எச்சரிக்கை!
நயன்தாராவின் பிறந்த நாளுக்கு ரூ.10 கோடி காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
விஜய் தேவரகொண்டா பற்றி மறைமுகமாக பேசிய ரஷ்மிகா
கால்வாயில் சிக்கிக்கொண்ட குட்டி யானை - 3 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்பு