Rajinikanth: விஜய்யை ஓவர்டேக் செய்ய நினைக்கும் ரஜினிகாந்த்.. புது படத்தின் சம்பளம் இவ்வளவா?

Rajinikanths Salary Demand: தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டராக ரசிகர்களை கவர்ந்துவருபவர் ரஜினிகாந்த். இவர் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, புது படத்திற்காக தயாராகிவருகிறார். இந்நிலையில் இவர் தளபதி விஜய்யின் சம்பளத்தை ஓவர்டேக் செய்யும் விதத்தில், படக்குழுவிடம் அதிக சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இது குறித்து பார்க்கலாம்.

Rajinikanth: விஜய்யை ஓவர்டேக் செய்ய நினைக்கும் ரஜினிகாந்த்.. புது படத்தின் சம்பளம் இவ்வளவா?

ரஜினிகாந்த்

Updated On: 

14 Feb 2026 15:41 PM

 IST

தமிழில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் 70 வயதை கடந்தும் தற்போதும்படங்களில் கதாநாயகனாகவே நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் கூலி (Coolie). இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh kanagaraj) இயக்கத்தில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ் ஸ்ருதி ஹாசன் உட்பட பல்வேறு பிரபலங்ககள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இருந்தாலும் இப்படமானது மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இதையடுத்து நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்திலும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தலைவர்173 (Thalaivar 173) படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் கமல் ஹாசனுடன் இணைந்து தலைவர் 174 படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக ரஜினிகாந்த் கேட்ட சம்பளம் இணையத்தில் வைரலாகிவருகிறது. அது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: சூர்யா 46 படத்தின் ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

புது படத்திற்கு அதிகம் சம்பளம் கேட்கும் ரஜினிகாந்த் :

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ள நிலையில், மிக பிரம்மாண்டமாக இந்த படமானது தயாராகவுள்ளதாம். இந்த படத்தை ஜெயிலர் 2 படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த விதத்தில் இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் அதிகம் சம்பளம் கேட்டுவருகிறாராம். இப்படத்தில் நடிப்பதற்கு ரூ 225 கோடிகளை சம்பளமாக ரஜினிகாந்த் கேட்கிறாராம்.

இதையும் படிங்க: யூத் ஜெனரேஷன் காதல் கதையில்.. ‘பூக்கி’ படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

தளபதி விஜய் தான் தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்த நிலையில், அவர் தனது இறுதிப்படமான ஜன நாயகன் படத்திற்கு ரூ 22 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் அவரை விடவும் ரூ 5 கோடி அதிகமாக ரஜினிகாந்ர்த தனது புது படத்திற்காக கேட்டுள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

ரஜினிகாந்தின் சம்பளம் குறித்து வைரலாகும் பதிவு:

தற்போது ரஜினிகாந்த் , இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தலைவர்173 படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள நிலையில், அனிருத் தான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது.

அமெரிக்காவில் இறந்த மாணவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் டாலர் இழப்பீடு
நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப் மூலம் பணம் கேட்டு மிரட்டல்..
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் காணப்படும் கண்ணாடி பாட்டில்கள் - அதன் அர்த்தம் என்ன தெரியுமா?
பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்திய அமெரிக்கா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்