Raghava Lawrence : தனது சொந்த வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றும் ராகவா லாரன்ஸ்.. இலவச கல்வி வழங்குவதாக அறிவிப்பு!

Raghava Lawrence To Open School : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல்வேறு பணிகளை சிறப்பாக் செய்துவருபவர் ராகவா லாரன்ஸ். இவர் சமூக ஆர்வலராகவும் இருந்து, பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், தனது சொந்த வீட்டையே பள்ளிக்கூடமாக மாற்றவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Raghava Lawrence : தனது சொந்த வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றும் ராகவா லாரன்ஸ்.. இலவச கல்வி வழங்குவதாக அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ்

Published: 

11 Sep 2025 19:31 PM

 IST

நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். இவர்  பல்வேறு ஏழை மக்கள் மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். நடிகர் சூர்யா (Suriya) அகரம் அறக்கட்டளையை வைத்திருப்பதுபோல், நடிகர் ராகவா லாரன்சும் மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் (Disabled persons) மற்றும் ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், சினிமாவிலும் தனக்கு வரும் சம்பளத்தில் ஒரு பங்கினை, தனது ட்ரஸ்டிற்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், நடிகர் ராகவா லாரன்ஸ், காஞ்சனா 4 ஷூட்டிங் தொடங்கியதாக அறிவித்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர், தனது சம்பாத்தியத்தில் முதன்முதலில் கட்டிய வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தகவலானது தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் ராகவா லாரன்ஸை பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : AK 64 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்

நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றும் ராகவா லாரன்ஸ்

இந்த பதிவில் ராகவா லாரன்ஸ், தனது சம்பாத்தியத்தில் முதன் முதலாக வாங்கிய வீட்டை, ஆரம்பத்தில் மாணவர்களுக்கு தங்கும் இடமாக வைத்திருந்தேன். இந்நிலையில், தற்போது அதை பள்ளிக்கூடமாக மாற்றவுள்ளேன். இந்த பள்ளிக்கூடத்தின் மூலமாக பல மாணவர்களுக்கு இலவச கல்லவியை கொடுக்கவுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த பள்ளியின் ஆசிரியராக, தனது அறக்கட்டளையில் படித்த மாணவியையும் அறிமுகப்படுத்தியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இதையும் படிங்க : மோனிகா பெலூசி… எறங்கி வந்தாச்சி.. பூஜா ஹெக்டேவின் நடனத்தில் வெளியானது கூலி பட ‘மோனிகா’ வீடியோ பாடல்!

மேலும் இந்த பள்ளியின் மூலம் பல்வேறு மாணவர்கள் பலனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸின் இந்த செயலுக்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

காஞ்சானா 4 திரைப்படம் :

நடிகர் ராகவா லாரன்ஸின் நடிப்பில் இதுவரை, காஞ்சனா 3 படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் தொடர்ச்சியாக தற்போது காஞ்சனா 4 திரைப்படமும் உருவாகிவருவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே மற்றும் நோரா ஃபதேஹி இணைந்த நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவும் என கூறப்படுகிறது.