Thaai Kizhavi: ‘மாட்டிகிட்டான் மைனர்குஞ்சு’.. தாய் கிழவி பட 2வது பாடல் வெளியானது!

Thaai Kizhavi Movie 2nd Single: தமிழில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் தாய் கிழவி. இதில் ராதிகா சரத்குமார் நடிக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், இதன் 2வது பாடல் மாட்டிகிட்டான் மைனர்குஞ்சு என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Thaai Kizhavi: மாட்டிகிட்டான் மைனர்குஞ்சு.. தாய் கிழவி பட 2வது பாடல் வெளியானது!

தாய் கிழவி பட 2வது பாடல்

Updated On: 

21 Feb 2026 18:59 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) தயாரிப்பிலும், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கத்திலும் வெளியாகக் காத்திருக்கும் திரைப்படம்தான் “தாய் கிழவி” (Thaai Kizhavi). இந்த படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar) கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படமானது இவரின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இவருடன் இப்படத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், பாலா சரவணன், இளவரசு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இதில் தண்டட்டி கிழவி, “பானுவுதாயி” என்ற வேடத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026 பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா (Niwas K Prasanna) இணையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே இப்படத்திலிருந்து தாய் கிழவி வாரா என்ற முதல் பாடல் வெளியாகியிருந்தது.

இதை சிவகார்த்திகேயன் பாடியிருந்த நிலையில், நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் தற்போது இப்படத்திலிருந்து 2வது பாடல் வெளியாகியுள்ளது. “மாட்டிகிட்டான் மைனர்குஞ்சு” (Maatikitaan Minorkunju) என்ற இந்த பாடலை பாடகி சுப்ளாஷினி பாடியுள்ளார். இவர் ஏற்கனவே கோல்டன் ஸ்பேரோ, மோனிகா போன்ற பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அரசன் படத்திலிருந்து விலகிவிட்டேனா? – விஜய் சேதுபதி விளக்கம்!

தாய் கிழவி படத்தின் 2வது பாடல் மாட்டிகிட்டான் மைனர்குஞ்சு பாடல் குறித்து வெளியாகி பதிவு:

தாய் கிழவி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது :

இந்த தாய் கிழவி திரைப்படமானது வரும் 2026 பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இப்படமானது கிழவியின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட நிலையில், முற்றிலும் கிராமப்புற கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை ராதிகா சரத்குமார் பல கஷ்டங்களை பட்டதாகவும் நேர்காணலில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் வித்தியாசமான கதைக்களத்தில் இப்படமானது தயாராகியுள்ள நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.

இதையும் படிங்க: KH X RK படத்தில் கமல்ஹாசனின் பெயர் முதலில் வர காரணம் என்ன? – வைரலாகும் தகவல்!

இப்படத்தை சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் பார்த்துள்ளார். இப்படத்தை பார்த்த அவர் நிச்சயம் வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் டிக்கெட் புக்கிங் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இடத்ன் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. அதன்படி வரும் 2026 பிப்ரவரி 23ம் தேதி அல்லது 24ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்