Arasan: சிலம்பரசனின் அரசன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்? யார் தெரியுமா?
Arasan Movie Update: கோலிவுட் நாயகனான சிலம்பரசனின் நடிப்பில், சிறப்பாக உருவாகிவரும் திரைப்படம்தான் அரசன். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு தமிழ் நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது யார் என பார்க்கலாம்.

அரசன் திரைப்படம்
நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் புதிய புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் அவரின் நடிப்பில், மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவரும் திரைப்படம்தான் அரசன் (Arasan). இதை இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்க, தனுஷின் வட சென்னை படத்தின் டைம் லைனில் நடக்கும் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இதில் தனுஷும் சிறப்பு வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. நடிகர் சிலம்பரசன் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேலாக இப்படத்தின் ஷூட்டிங் பணிகளில் பிசியாக இருந்துவருகிறார். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில், வீ க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவருகிறார்.
இந்த படத்தில் சமுத்திரக்கனி, அமீர், ஆண்ட்ரியா போன்ற பிரபலங்கள் நடித்துவருகின்றனர். அந்த விதத்தில் மேலும் ஒரு தமிழ் நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த நடிகர் வேறுயாருமில்லை, ஆர்.பார்த்திபன்தான். இதுகுறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பேசப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: வேஷ்டி சட்டை போடும்போது இருக்குற ஃபீல் – கலகலப்பாக பேசிய தனுஷ்!
அரசன் திரைப்படத்தில் ஆர்.பார்த்திபன் இணைந்தது குறித்து வைரலாகும் பதிவு:
#Parthiban on Board in #ARASAN
The shooting of this film is currently underway in Chennai.#SilambarasanTR pic.twitter.com/aToxSElFzp
— Movie Tamil (@_MovieTamil) April 27, 2026
இதுவரையில் சிலம்பரசன் மற்றும் ஆர்.பார்த்திபனின் கூட்டணி எந்த படத்திலும் இணைந்ததில்லை, அந்த வகையில் இந்த அரசன் திரைப்படத்தில் முதல் முறையாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஆர்.பார்த்திபன் எந்த வேடத்தில் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் மத்தயில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தின் இரண்டாவதுகட்ட ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இதன் ஷூட்டிங் புகைப்படங்களை சிம்பு அவ்வப்போது பகிர்ந்துவருவது வழக்கமே. இந்நிலையில் இதில் நாயகியாக யார் நடிக்கிறார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: எனக்கு ஒரு கதை சொல்லிவிட்டு காணாமல் போய்விட்டீர்கள்.. வெங்கி அட்லூரி பற்றி பேசிய தனுஷ்!
ஆனால் நடிகை பிரியங்கா மோகன், சிலம்பரசனுக்கு ஜோடியாக அரசன் படத்தில் நடித்துவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கானது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட் படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அரசன் படத்திலிருந்து அப்டேட் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.