ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணி படம்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Kamal Haasan And Rajinikanth Reunion: தென்னிந்திய சினிமாவில், குறிப்பாக தமிழ் மக்களிடையே பிரபலமான இரு நாயகர்கள்தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் இணைந்து புது படத்தில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அந்த திரைப்படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணி படம்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

கமல் மற்றும் ரஜினி

Updated On: 

07 Feb 2026 11:43 AM

 IST

கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களாக இருந்துவருபவர்கள் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர்கள் இருவருமே தமிழில் மிக பிரம்மாண்ட திரைப்படங்களில் தற்போது வரையிலும் கதாயகனாகவே நடித்துவருகின்றனர். இவர்கள் இருவரும் இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் “அபூர்வ ராகங்கள்” (Apoorva Raagangal) என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் மூலமாகதான் நடிகர் ரஜினிகாந்த் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தபடமானது இவர்கள் இருவருக்குமே நல்ல வரவேற்பை கொடுத்தது. மேலும் அடுத்தடுத்த படங்களிலும் இவர்களின் காம்போ இணைந்து நடித்திருந்தது. பின் சில காரணங்களால் அவர்கள் இருவருமே சினிமாவில் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில் கிட்டத்தட்ட 46 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இந்த திரைப்படத்தை எந்த இயக்குநர் இயக்கவுள்ளார் என எதிர்பார்த்த நிலையில், இதை ஜெயிலர் (Jailer) படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) தான் இயக்கவுள்ளாராம். இந்நிலையில் இது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகிவந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கான ஹேப்பி நியூ ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: முதல் காதலை தேடி பயணம்.. அபிஷன் ஜீவிந்தின் ‘வித் லவ்’ படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் அப்டேட் :

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவந்த நிலையில், அதில் ரஜினிகாந்திற்கான ஷூட்டிங் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாம். இந்நிலையில் இன்று 2026 பிப்ரவரி 7ம் தேதியில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ள படத்தின் புரோமோ ஷூட்டிங் தொடங்கியுள்ளதாம்.

இதையும் படிங்க: தளபதி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ‘ஜன நாயகன்’ பட ரிலீஸில் புது திருப்பம்!

இந்த புரோமோ ஷூட்டிங்கானது காமெடி மற்றும் ஆக்ஷ்ன் காட்சிகளுடன் தயாராகிவருகிறதாம். இந்த புரோமோவில் நெல்சன் மற்றும் அனிருத் இருவருமே இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெகுவிரைவில் புரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் – கமல்ஹாசனின் படம் குறித்து வைரலாகும் பதிவு:

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையவுள்ள நிலையில், இந்த படமானது நிச்சயமாக சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றிபெறும் என்பது உறுதி. இப்படம் ஆக்ஷன் மற்றும் காமெடி போன்ற ஜானரில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்