Dude Movie: ‘டியூட் சூப்பர் டூப்பர் ஹிட்…’ – பிரதீப் ரங்கநாதனின் படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த தயாரிப்பாளர்!
Dude Movie First Review: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நாயகனாக இருந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில், உருவாகியிருக்கும் படம் டியூட். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஒய்.ரவி சங்கர், இப்படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்திருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதன் மற்றும் தயாரிப்பாளர் ரவி சங்கர்
நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகிவருகிறது. அந்த வகையில், இவரின் நடிப்பில் 4வதாக உருவாகியுள்ள திரைப்படம்தான் டியூட் (Dude). இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பின் கீழ் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக இந்த டியூட் திரைப்படமானது தயாராகியுள்ளது. இதில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்திருக்கிறார். இவர்கள் இருவரின் ஜோடி காமினேஷன் இந்த படத்தில் நன்றாகவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று 2025 அக்டோபர் 9ம் தேதியில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஒய். ரவி சங்கர் (Producer Y. Ravi Shankar), இந்த டியூட் படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்துள்ளார். அது குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ‘கருப்பு’ படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையும் நடிகர் இவரா? வைரலாகும் தகவல் இதோ!
டியூட் படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த தயாரிப்பாளர் ஒய். ரவி சங்கர் :
அந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஒய்.ரவி சங்கர், பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து டியூட் படத்தை பற்றி பேசத்தொடங்கிய அவர், இப்படத்தை பார்த்ததாக முதல் விமர்சனம் கொடுத்திருந்தார். அதில் அவர், “நான் இந்த டியூட் திரைப்படத்தை பார்த்தேன். மிகவும் அசாதாரணமான படமாக. இந்த படமானது நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என மிகவும் நம்புகிறேன். படத்தின் ட்ரெய்லரை சொல்லாத நிறைய சுவாரசியங்கள் இருக்கிறது.
இதையும் படிங்க : மிகவும் திறமையானவர்.. சாய் அபயங்கரைப் பாராட்டிய டியூட் பட தயாரிப்பாளர்!
நிச்சயமாக ரசிகர்களாகிய நீங்கள் அதிகமாக ரசிப்பீர்கள். இந்த படத்தை தயாரிப்பாளர்கள், வியோகஸ்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் பார்த்து நிச்சயமாக மகிழ்ச்சியடைவார்கள் என்று டியூட் படத்தின் தயாரிப்பாளர் ஒய். ரவி சங்கர் இப்படத்திற்கு முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். இது தொடர்பான தகவல் ரசிகர்கள் மத்தியில் வவைரலாகிவருகிறது.
டியூட் படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் தொடர்பான பதிவு :
Entertainment goes in overdrive mode with the DUDE’S TOP GEAR ❤🔥#DudeTrailer out now 💥💥
Tamil
▶️ https://t.co/bKroSgx8YNTelugu
▶️ https://t.co/H7qrqz40Ks#Dude Grand Festive Release on October 17th in Tamil & Telugu ✨⭐ing ‘The Sensational’ @pradeeponelife
🎬… pic.twitter.com/ofWJOjbCvC— Mythri Movie Makers (@MythriOfficial) October 9, 2025
இந்த டியூட் படமான 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்துடன் பைசன் மற்றும் டீசல் என 2 பிரபல நடிகர்களின் படங்களும் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.