Jana Nayagan: ஜன நாயகன் ஹீரோ இப்போ CM.. படம் சீக்கிரம் வரும் – ஜன நாயகன் பட தயாரிப்பாளர் பேச்சு!

Jana Nayagan Producer: தமிழக முதலமைச்சரும், முன்னாள் நடிகருமான விஜய் இறுதியாக நடித்த திரைப்படம்தான் ஜன நாயகன். இந்த படமானது இன்னும் சென்சார் பிரச்னையின் காரணமாக வெளியிடப்படாமல் உள்ளது. அந்த வகையில் இன்று விஜய் முதல்வராக பதிவியேற்ற விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா ஜன நாயாகன் பட ரிலீஸ் குறித்து நச் பதிலை கூறியுள்ளார்.

Jana Nayagan: ஜன நாயகன் ஹீரோ இப்போ CM.. படம் சீக்கிரம் வரும் - ஜன நாயகன் பட தயாரிப்பாளர் பேச்சு!

முதல்வர் விஜய் பற்றி ஜன நாயகன் தயாரிப்பாளர்

Updated On: 

10 May 2026 16:21 PM

 IST

தமிழ் சினிமாவில் மற்றும் தளபதி ரசிகர்கள் மத்தியில் இந்த 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் தமிழக முதல்வரும், முன்னாள் நடிகருமான தளபதி விஜய் (Thalapathy Vijay) ஹீரோவாக நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகவேண்டியிருந்த நிலையில், சென்சார் பிரச்சனைகளால் ஒத்திவைக்கப்பட்டது. பின் உச்ச நீதிமன்றத்தில் இதன் வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், பின் வாபஸ் வாங்கப்பட்டு, சென்சார் துறைக்கு சாதகமாகவே எல்லாம் நடந்தது. பின் திடீரென முழு படமும் இணையத்தில் கசிந்த நிலையில், அதை இணையத்தில் லீக் செய்தவர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்திருந்தனர். அந்த வகையில் இன்னும் சென்சார் வழங்கப்படாமல் திரைப்படம் இருக்கிறது. இந்நிலையில் இன்று 2026 மே 10ம் தேதியில் தவெக தலைவரும், முன்னாள் நடிகருமான விஜய் தமிழக முதலமைச்சராக பதிவியேற்றிருந்தார் (Tamilnadu CM VIjay).

இந்த விழா சென்னை நேரு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றிருந்த நிலையில், அதில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா கலந்துகொண்டிருந்தனர். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜன நாயகன் பட ரிலீஸ் குறித்து நச் பதிலை கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: மாதவன் முதல் பா.ரஞ்சித் வரை… தமிழக முதல்வராக பதவியேற்ற ச.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்!

ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா கொடுத்த பதில்:

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்த தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா, “விஜய் சார் முதலமைச்சரானது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. எல்லாரும் ஜன நாயகன் படத்தின் டைட்டிலை நினைக்கிறாங்க, அவர் தற்போது தமிழ்நாட்டின் ஜன நாயகனாக இருக்கிறார். நாங்கள் தற்போது சென்சார் சான்றிதலுக்காக காத்திருக்கிறோம். அந்த சான்றிதழ் வந்தாலே நிச்சயமாக ரிலீஸ் செய்வோம். தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இதையும் படிங்க: கருப்பன் வரான் வழிமறிக்காதே.. இன்று வெளியாகிறது சூர்யாவின் கருப்பு பட ட்ரெய்லர்!

தமிழகத்தின் முதலமைச்சரான விஜய் சாருக்கு எனது வாழ்த்துக்கள். அனைவருக்கு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. விஜய் சார் அனைத்து சாத்தியங்களை மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்பிகிறேன். புதிய அத்தியாயம் தொடங்குகிறது. சென்சார் கிடைத்ததும், விரைவில் ஜன நயகன் படம் வெளியாகும்” என அவர் அதில் கூறியிருந்தார்.

முதலமைச்சர் விஜயை வாழ்த்தி தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தற்போது தமிழக முதலமைச்சராக தளபதி விஜய் பதிவியேற்றிருக்கும் நிலையில், விரைவில் அவர் நடித்திருந்த கடைசி படமான ஜன நாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 2026 ஜூலை 22ம் தேதியில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
Related Stories
இரவும் பகலும் உழைக்கும் உங்கள் அன்பு.. நயன்தாராவிற்கு அன்னையர் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!
Annam Serial: முதலமைச்சராக பதவியேற்ற விஜய்.. கொண்டாடி தீர்த்த சன் டிவி சீரியல் நடிகர்கள்!
Jai: அவர் கொடுத்த முதல் வாய்ப்பு.. நான் சினிமாவில் இந்த நிலையில் இருக்க விஜய் அண்ணன்தான் காரணம் – நடிகர் ஜெய் பேச்சு!
Karuppu: கருப்பன் வரான் வழிமறிக்காதே.. இன்று வெளியாகிறது சூர்யாவின் கருப்பு பட ட்ரெய்லர்!
S.A.Chandrasekhar: முதலமைச்சராக பதிவியேற்ற மகன் விஜய்.. கண்கலங்கிய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்!
C. Joseph Vijay: மாதவன் முதல் பா.ரஞ்சித் வரை… தமிழக முதல்வராக பதவியேற்ற ச.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்!
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி