ரன் படத்திற்கு லிங்குசாமி முதலில் சொன்ன நடிகர் அவர்தான் – தயாரிப்பாளர் ஓபன் டாக்
Producer A.M. Ratnam Talks About Run Movie Casting: தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ரன். இந்தப் படத்தில் மாதவனுக்கு முன்னதாக வேறு ஒரு நடிகரை நாயகனாக நடிக்க வைக்க லிங்குசாமி விருப்பப்பட்டதாக தயாரிப்பாளர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரன்
தமிழ் சினிமாவில் இயக்குநர் லிங்குசாமியின் படங்களுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவரது இயக்கத்தில் வெளியாகும் பெரும்பாளான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயகுநர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002-ம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரன். இந்தப் படத்தில் நடிகர் மாதவன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரகுவரன், அதுல் குல்கர்னி, விவேக், அனு ஹாசன், ஜானகி சபேஷ், ராஜஸ்ரீ, கலைராணி, எஸ்.என்.லட்சுமி, மதன் பாப், விஜயன், நெல்லை சிவா, ரவி பிரகாஷ், போண்டா மணி, சாத்தப்பன் நந்தகுமார், சம்பத் ராம், பாவா லட்சுமணன், பெஞ்சமின் என பல நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சூர்யா மூவிஸ் சார்பாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரித்து இருந்த நிலையில் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்தார். மேலும் இந்தப் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரன் படத்திற்கு நாயகனாக லிங்குசாமியின் முதல் சாய்ஸ் இந்த நடிகரா?
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் கூறியதாவது இந்த ரன் படத்தில் முன்னதாக நடிகர் ஸ்ரீகாந்தை நாயகனாக நடிக்க வைக்க வேண்டு என்று இயக்குநர் லிங்குசாமி விருப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் மாதவன் நாயகனாக நடித்து சூப்பர் ஹிட் அடித்து இருந்த நிலையில் இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… LIK Movie: அடாவடி.. பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட 3வது பாடல் வெளியானது!
இணையத்தில் வைரலாகும் ஏ.எம்.ரத்னம் பேச்சு:
‘Run’ படத்துக்கு ‘Srikanth’-அ வச்சி பண்ணலாம்னு ‘Lingusamy’ சொன்னார்!😱 – Producer ‘AM Ratnam’ pic.twitter.com/VgJUgorlD6
— Tharani ʀᴛᴋ (@iam_Tharani) March 30, 2026
Also Read… GV Prakash: பான் இந்திய படம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை – ஜி.வி. பிரகாஷ்!