மோகன்லாலின் லூசிஃபர் 3 படம் பற்றி தவறான கருத்து? – நடிகர் பிருத்விராஜ் தரப்பு விளக்கம்!
L3 Azrael Movie Rumors : மலையாள சினிமாவில் பல கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று லூசிஃபர். நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மோகன்லாலின் கூட்டணியில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் மூன்றாவது பாகம், லூசிஃபர் 3 தவறான கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில், அது குறித்தது படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.

மோகன்லால் மற்றும் பிருதிவிராஜ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் மோகன்லால் (Mohanlal). இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு வெளியான திரைப்படம் எல் 2 : எம்புரான் (L2 Empuraan). இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரன் (Prithviraj sukumaran) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படமானது பான் இந்திய அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது கடந்த 2019ம் ஆண்டு வெளியான லூசிஃபர் (Lucifer) என்ற திரைப்படத்தின் 2வது பாகமாக வெளியாகியிருந்தது.
இந்த படத்தில் நடிகர் மோகன்லால் முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகர் பிருத்விராஜும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதிரடி ஆக்ஷ்ன் படமாக வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இதன் 3 ஆம் பாகமான, எல் 3 :அஸ்ரேல் (L3: Azrael) படம் குறித்து தவறான கருத்துக்கள் வெளியாகி வந்தது. இந்த தகவலுக்கு நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரன் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படங்க : வெளிநாடுகளில் வசூலைக் குவிக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம்.. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ!
லூசிஃபர் 3 படம் வதந்திகளுக்கு பிருத்விராஜ் தரப்பு விளக்கம் :
சமூக ஊடகங்களில் லூசிஃபர் 3 (எல் 3 :அஸ்ரேல்) படமானது முழுவதும், நீருக்கு அடியில் எடுக்கவிருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியிருந்ததில் இதற்கு நடிகர் பிருத்விராஜ் தரப்பு, லூசிஃபர் 3 படம் குறித்து ஊடகங்களில் சில தவறான கருத்துக்கள் வெளியாகிவருகிறது. இது அனைத்தும் போலியானவை எனவும், படம் குறித்து தவறான கருத்துக்கள் வெளியாகிவருவதாகவும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க : சூர்யா சாருடன் பணியாற்ற விருப்பும்.. ஓபனாக பேசிய லோகேஷ் கனகராஜ்!
வைரலாகும் இஸ்டாகிராம் பதிவு :
எல் 2 : எம்புரான் படத்தின் மொத்த வசூல் :
மோகன் லால் மாற்றம் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் கூட்டணியில் வெளியான இப்படமானது குஜராத் கலவரம் குறித்த கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இதனால் வட இந்தியாவில் இந்த படத்தின் மீது எதிர்ப்புகள் கிளம்பின. இதைத் தொடர்ந்து அந்த கலவரம் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டது. இதற்கு நடிகர் மோகன்லாலும் மன்னிப்பு கேட்டிருந்தார். அந்த நிலையிலும் இப்படமானது மக்களிடையே வரவேற்பைப் பெற்று சுமார் ரூ 325 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.