பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் தாமதம் ஆக காரணம் என்ன? தயாரிப்பாளர் விளக்கம்

Premalu Movie Part 2: மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் மலையாளத்தில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வரிசையில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற படம் பிரேமலு, இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்து தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் தாமதம் ஆக காரணம் என்ன? தயாரிப்பாளர் விளக்கம்

பிரேமலு 2

Updated On: 

11 Jun 2025 11:39 AM

நடிகர்கள் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju) முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தப் படம் பிரேமலு. இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மலையாளத்தில் உருவான இந்தப் படத்தை கேரளா மட்டும் இன்று தென்னிந்திய மொழிகளில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடினர். குறிப்பாக தமிழ் நாட்டில் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிக அளவில் வரவேற்றது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடந்து கடந்த 2024-ம் ஆண்டின் இறுதியில் இந்த பிரேமலு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி 6 மாதங்களைக் கடந்த நிலையில் படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வெளியாகமல் இருந்ததால் படம் நடக்குமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்தது.

பிரேமலு 2 குறித்து தயாரிப்பாளர் சொன்ன விசயம்:

பிரேமலு படத்தை பாவனா ஸ்டுடியோஸ், ஃபஹத் பாசில் மற்றும் நண்பர்கள், வொர்க்கிங் கிளாஸ் ஹீரோ ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் கீழ் நடிகர்கள் ஃபகத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடிஅக்ர் திலீஷ் போத்தன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் பிரேமலு பாகம் 2 குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தாமதமாகி வருகிறது என்று தெரிவித்துள்ளார். தற்போது பிரேமலு பாகம் இரண்டு படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், படக்குழு மீண்டும் எப்போது பணிகளைத் தொடங்குவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய திலீஸ் போத்தன் பிரேமலு படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏடி மற்றொரு படத்தை தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இயக்க உள்ளதாகவும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்றும் அந்தப் பேட்டியில்  தெரிவித்துள்ளார். பிரேமலு 2 படத்தினை ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக உள்ளது.

நஸ்லேன் – மமிதா பைஜுவிற்கு வரிசைக்கட்டும் படங்கள்:

பிரேமலு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர்கள் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜு இருவரும் பிசியான நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்களது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில் புதுப் படங்களில் ஒப்பந்தம் ஆகும் செய்தியும் அதிகமாக வருகின்றது.

நடிகை மமிதா பைஜூ இன்ஸ்டா பதிவு:

இதில் குறிப்பாக நடிகை மமிதா பைஜூ தமிழில் அதிகப் படங்களில் கமிட்டாகி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை மமிதா பைஜு தற்போது தமிழில் ஒப்பந்தமாகி நடித்து வரும் படங்கள் என்னென்ன என்றால் தளபதிவி விஜயின் ஜன நாயகன், சூர்யாவின் சூர்யா 46, பிரதீப் ரங்கநாதனின் டூட், நடிகர் விஷ்ணு விஷால் உடன் இரண்டு வானம் என ஒரே நேரத்தில் 4 படங்களில் வரிசையாக கமிட்டாகி நடித்து வருகிறார்.