மலையாளம்னா படம் ஓடியிருக்கும்.. ரிவியூ செய்யும் மனநோயாளிகள்.. கொந்தளித்து பேசிய மெய்யழகன் இயக்குநர்!

Meiyazhagan Movie : இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மெய்யழகன். நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த சாமியின் நடிப்பில் வெளியான இந்த ஃபீல் குட் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் குறித்து இயக்குநர் சமீபத்தில் பேசியது வைரலாகி வருகின்றது.

மலையாளம்னா படம் ஓடியிருக்கும்.. ரிவியூ செய்யும் மனநோயாளிகள்.. கொந்தளித்து பேசிய மெய்யழகன் இயக்குநர்!

இயக்குநர் பிரேம் குமார்

Updated On: 

24 Sep 2025 14:30 PM

 IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு 27-ம் தேதி செப்டம்பர் மாதம் வெளியானது மெய்யழகன் (Meiyazhagan Movie) படம். இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் ஃபீல் குட் படமாக மெய்யழகன் தமிழ் சினிமாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகர் அரவிந்த் சாமி முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சரண் சக்தி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, சுவாதி கொண்டே, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், ரைச்சல் ரபேக்கா, மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, ராஜ்குமார், இந்துமதி மணிகண்டன், ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன், வெற்றிவேல் ராஜா, எம்.எஸ்.பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

சொத்து பிரச்னை காரணமாக சொந்த ஊரை விட்டு சிறு வயதிலேயே சென்னைக்கு செல்கிறார் அரவிந்த சாமி. இவர் மீண்டும் தனது தங்கையின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இருந்து தஞ்சாவூரில் உள்ள நீடாமங்கலம் என்ற ஊரிற்கு வருகிறார். அங்கு தனது உறவினராக கார்தியை சந்திக்கிறார். மிகவும் இயல்பான அவரின் பாசத்தையும் பார்த்து நெகிழ்கிறார் நடிகர் அரவிந்த சாமி. தமிழ் சினிமாவில் வெளியான சிறப்பான ஃபீல் குட் படம் என்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தவறியது.

மெய்யழகன் படத்தை வரவேற்கத் தவறிய தமிழ் ரசிகர்கள்:

மெய்யழகன் மலையாளத்தில் எடுத்திருந்தால், தமிழ் ரசிகர்கள் அதைக் கொண்டாடியிருக்கலாம். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை. திருட்டுத்தனத்தை விட விமர்சகர்கள்தான் அதிக அச்சுறுத்தல். சிலருக்கு மனநலப் பிரச்சினை உள்ளது. எனக்கு விமர்சகர்கள் மீது எந்த பயமும் இல்லை, அதனால்தான் நான் பேசுகிறேன் என்று படத்தின் இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்து இருந்தார்.

இந்தப் படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரேம் குமார் அளித்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது – பொய்யான செய்திக்கு விளக்கம் அளித்த ரிஷப் ஷெட்டி

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் பிரேம் குமார் பேசிய வீடியோ:

Also Read… ப்ளூ ஸ்டார் படத்திற்காக விருதை வென்ற சாந்தனு – வைரலாகும் போட்டோஸ்